திருக்கோவையார் 144 ஆம் செய்யுள்
பிரிவருமை கூறி வரைவு கடாதல்
அஃதாவது:
தலைவன் சிறைப்புறமாக வந்து நிறானாக. அப்பொழுது ஐவன நெற்கதிர் கொய்யப்பட்டுவிட்டதனையும்,
அதனால் தாங்கள் தலைவனைப் பிரிந்து செல்ல நேர்ந்திருப்பதனையும், தலைவனுக்குணர்த்தி,
நீ இனி வரைந்து கொண்டாலன்றித் தலைவியைக் காண்டலரிது என வரைவு கடாவுவாள் குறிப்பாக
இளங்கிளிகள் மேலிட்டு அத்தலைவன் கேட்பக் கூறியது என்பதாம். அதற்குச் செய்யுள்:
பரிவுசெய்
தாண்டம் பலத்தும்
பயில்வோன் பரங்குன்றின்வாய்
அருவிசெய் தாழ்புனத் தைவனங்
கொய்யவு மிவ்வனத்தே
பிரிவுசெய் தாலரி தேகொள்க
பேயொடு மென்னும்பெற்றி
இருவிசெய் தாளி னிருந்தின்று
காட்டு மிளங்கிளியே.
|
மறைப்புறக் கிளவியிற் சிறைப்புறத் துரைத்து.
(இ-ள்) பரிவுசெய்து
ஆண்டு-எம்பால் இரக்கங் கொண்டு வலியவந்து எம்மை ஆட்கொண்டு; அம்பலத்துப் பயில்வோன்
பரங்குன்றின்வாய்-பொன்னம்பலத்தின்கண் கூத்தாடுகின்ற இறைவனுடைய திருப்பரங்குன்றின்
கண்ணே; அருவிசெய்தாழ் புனத்து ஐவனங் கொய்யவும்-அருவிநீர் கால்யாத்துப் பயிர் செய்யப்பட்ட
தாழ்ந்த புனத்தின்கண்விஐந்து முதிர்ந்த ஐவன நெல்லை அரிந்தபின்னரும்; இவ்வனத்து
இருவிசெய் தாளின் இருந்து-அக்காட்டின்கண் இருவியாகச் செய்யப்பட்ட வறிய தாளிலே
இருந்து; இளங்கிளி-இளமையுடைய கிளிகள்; செய்தால் பேயோடும் பிரிவு அரிது-நட்புச்
செய்தால் பேயோடாயினும் பின்னர்ப் பிரித்தல் துன்பமாம்; கொள்க என்னும் பெற்றி
இன்று காட்டும்-இக்கருத்தினை நீயிர் நெஞ்சிலே நிறுத்திக்கொள்க என்னும் தன்மையை
இப்பொழுது எமக்கு விளக்குகின்றன. அவை அளியன என்க.
(வி-ம்.) பரிவு-இரக்கம்.
அம்பலம்-பொன்னம்பலம். அருவி: ஆகுபெயர். செய்தல்-பயிர் உண்டாக்குதல். புனம்-கொல்லை.
ஐவனம்-மலைநெல். இது குறிஞ்சி கருப்பொருள். செய்தால் பிரிவு அரிது என மாறுக. செய்தால்
நட்புச்செய்தால் என்க. பேயோடும்
|