432கல்லாடம்[செய்யுள்



திருக்கோவையார் 392 ஆம் செய்யுள்:
கலவிகருதிப் புலத்தல்

     அஃதாவது: தலைவன் பரத்தையைப் புனலாட்டுவித்தமை கூறி ஊடுகின்ற தலைமகளை அவ்வூடல் தீர்த்தற் பொருட்டு அவளுடைய நுதலும் தோளு முதலாயினவற்றைத் தைவந்து தலையளி செய்யாநிற்ப, அது கண்ட தலைவி ஐய! எம்முடைய சிறிய இல்லின்கண் வந்து அற்றைநான் நீயிர் செய்த தலையளியை அற்றைநாள் யாம்விரும்பினே மெனினும் இன்று நுந்திருவருள் எங்களுக்கு நீயிர் வந்த இத்துணையே அமையும். வேறு நீயிர் தலையளி செய்ய வேண்டுவதில்லையென உள்ளத்தே கலவியைக் கருதி ஊடாநிற்றல் என்றவாறு, அதற்குச் செய்யுள்-

மின்றுன் னியசெஞ் சடைவெண்
     மதியன் விதியுடையோர்
சென்றுன் னியகழற் சிற்றம்
     பலவன்றென் னம்பொதியி
னன்றுஞ் சிறியவ ரில்லெம
     தில்லநல் லூரமன்னோ
வின்றுன் றிருவரு ளித்துணை
     சாலுமன் னெங்களுக்கே.

"கலைவள ரல்குல் தலைமகன் றன்னொடு கலவி கருதிப் புலவி புகன்றது"

     (இ-ள்) மின்துன்னிய செஞ்சடைவெள் மதியன் - மின்னலை ஒத்த சிவந்த சடையின்கண் வைத்த வெள்ளிய பிறையை யுடையோனும்; விதி உடையோர் சென்று உன்னிய கழல் சிற்றம்பலவன் - நல்வினை யுடையோர் சிற்றின்பத்திற்குக் காரணமான புலன்களை விட்டுச்சென்று நினைத்தற்குக் காரணமான கழல் கட்டிய திருவடியையுடையவனும் ஆகிய தில்லைத் திருச்சிற்றம்பல வாணனுடைய; தென்னம் பொதியில் எமது இல்லம் நன்றம் சிறியவர் இல் - தென்றிசைக்க ணுண்டாகிய பொதியமலையிடத் தமைந்த எமது குடி பெரிதும் சிறியவரது குடியாகுங்காண்; நல்ஊர- அதனால் நல்ல ஊரை உடையோய்; இன்று உன் திரு அருள் எங்களுக்கு இத்துணை சாலும் - யாங்கள் முற்காலத்தே நின் தலையளியை மிகவும் வேண்டினேமாயினும் இப்பொழுது உனது திருவருள் எங்கட்கு நீ இங்கு வந்த இத்துணையே அமையுங்காண். ஆதலால் இனி, நீ யாதும்தலையளி செய்தல் வேண்டா என்க.

     (வி-ம்.) மின் - மின்னல், செஞ்சடை வெண்மதி என்புழிச் செய்யுளின்பமுணர்க, விதி - ஆகூழ். சென்று என்றது சிற்றின்பத்