மூலமும் உரையும்433



திற்குக் காரணமான புலன்களை விட்டுச் சென்று என்பதுபட நின்றது. பொதியில் - பொதியமலை. நன்றும் - பெரிதும். மன்னும் ஒவும் இசைநிலை. சாலும்மன் என்புழி மன் ஒழியிசை. என்னை? யாங்கள் நின் தலையளியை இப்பொழுது வேண்டுகிலேம் என்பதுபட நிற்றலின். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - புலவி நீங்கிக் கலவி பெறுதல்.

 
 

செய்யுள் 57

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நடைமலை பிடித்த சொரியெயிற் றிடங்கரை
யாழி வலவ னடர்த்தது போலப்
புன்றலை மேதியைப் புனலெழ முட்டிய
வரியுடற் செங்கண் வராலுடன் மயங்க
வுட்கவைத் தூண்டி லுரம்புகந் துழக்கு
10
  நிறைநீ ரூர நெஞ்சகம் பிரிக்கும்
பிணிமொழிப் பாண னுடனுறை நீக்கி
நூலொடு துவளுந் தோறிரை யுரத்தின்
மால்கழித் தடுத்த நரைமுதிர் தாடிசெய்
வெள்ளி முகிழ்த்த வொருகட் பார்ப்பான்
15
  கோலுடன் படருங் குறுநகை யொருவிப்
பூவிலைத் தொழின்மகன் காவல்கை விட்டுத்
திக்குவிண் பெருகத் திருமதி கைலை
நாமகள் பெருங்கட னாற்கோட் டொருத்தல்
புண்ணிய மிவைமுதல் வெள்ளுடற் கொடுக்கும்
20
  புகழ்க்கவிப் பாடகர் புணர்ச்சியின் பகற்றி
யெல்லாக் கல்வியு மிகழ்ச்சிசெய் கலவியர்
பெருநகைக் கூட்டமுங் கழிவுசெய் திவ்விடை
மயக்குறு மாலை மாமக ளெதிர
வொருவழி படர்ந்த தென்னத் திருமுக
25
  மாயிர மெடுத்து வான்வழி படர்ந்து
மண்ணே ழுருவி மறியப் பாயும்
பெருங்கதத் திருநதி யொருங்குழி மடங்க
வைம்பகை யடக்கிய வருந்தவ முனிவ
னிரந்தன வரத்தா லொருசடை யிருத்திய
  கூடற் பெருமான் குரைகழல் கூறுஞ்
செம்மையர் போலக் கோடா
தெம்மைய நோக்கிச் சிறிதுகண் புரிந்தே.