438கல்லாடம்[செய்யுள்58]



இன்னேயென்பது பாடமாயின், இப்பொழுதே என்றுரைக்க. மெய்ப்பாடு; உவகை. பயன்:மகிழ்வித்தல்.

 
 

செய்யுள் 58

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நிரையிதழ் திறந்து மதுவண் டருந்தும்
விருந்துகொண் மலரும் புரிந்துறை மணமுஞ்
செந்தமிழ்ப் பாடலுந் தேக்கிய பொருளும்
பாலுஞ் சுவையும் பழமு மிரதமு
முடலு முயிரு மொன்றிய தென்னக்
10
  கண்டுந் தெளிந்துங் கலந்தவுள் ளுணர்வாற்
பாலு மமுதமுந் தேனும் பிலிற்றிய
வின்பமர் சொல்லி நண்புமணக் கடவார்
விண்ணவர் தலைவனும் வீயா மருந்து
15
  மளகைக் கிறையு மரும்பொரு ளீட்டமுங்
கண்ணனுங் காவலு முனியும் பசவு
மொன்றினுந் தவறா வொருங்கியைந் தனபோ
னீடிநின் றுதவுங் கற்புடை நிலையினர்
தவங்கற் றீன்ற நெடுங்கற் பன்னை
20
  முன்னொரு நாளின் முதற்றொழி லிரண்டினர்
பன்றியும் பறவையு மென்றுரு வெடுத்துக்
கவையா வுளத்துக் காணுங் கழலுங்
கல்வியி லறிவிற் காணு முடியு
மளவுசென் றெட்டா வளவின ராகி
25
  மண்ணு மும்பரு மகழ்ந்தும் பறந்து
மளவா நோன்மையி னெடுநாள் வருந்திக்
கண்ணினிற் காணா துளத்தினிற் புணராது
நின்றன கண்டு நெடும்பயன் படைத்த
திருவஞ் செழுத்துக் குறையா திரட்ட
  விருநில முருவிய வொருதழற் றாணத்
தெரிமழு நவ்வி தமருக மமைத்த
நாற்கர நுதல்விழித் தீப்புகை கடுக்கள
முலகுபெற் றெடுத்த வொருதனிச் செல்வி