என்புழி உமை இழிவு
சிறப்பு. பெற்றி-தன்மை. இருவி-கதிர் கொய்து விடப்பட்ட வறுந்தாள்.
கிளிகள்
தமக்கு இரைபெறும் பொருட்டு வந்து பயின்ற ஐவனப் புனத்தில் கதிர்கொய்த பின்னரும்
அப்புனத்தைப் பிரிய மாட்டாமல்வறிதே இருவிகளில் வந்துவீழ்கின்றன; இவற்றின் செயலால்
யாம் யாரோடாயினும் நட்புச் செய்தால் பிரிவு நேர்ந்துழிப் பெருந்துன்பமுண்டாகும்
என்பது உணர்கின்றோம் என்பது கருத்து. இதனால் ஐவனம் கொய்யப்பட்டமையும், இனித்
தலைவி இல்லிற்குச் சென்றுவிடுவாள் என்பதனையும், இப்பிரிவு அவளுக்குப் பெருந்துன்பமாயிற்று
என்பதனையும், அவளை இனி நீ காண்டலியலாது என்பதனையும் குறிப்பாகத் தோழி தலைவனுக்குணர்த்தினமை
உணர்க.ஆதலால் நீ விரைந்து வரைந்து கொள்க என்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு-அழுகை.
பயன்-பகற்குறி விலக்கி வரைவு கடாதல். இனி, பேயோடாயினும் பிரிவு செய்தாலாற்றுதல்
அரிதென்று உரைப்பினும் அமையும். இனி நம்பெருமான் என்செய்தாற்றுவார் என்றிரங்கினாளுமாயிற்று.
இனி, கொளுவின்கண் சிறைப்பட உரைத்து-என்று பாடபேதமும் உளது. அதற்குச் ட்சிறைக்கண்
வந்து நிற்பக் கூறியது என்று பொருள் கொள்க.
திருக்கோவையார்
138 ஆம் செய்யுள்
தினைமுதிர்வுரைத்து வரைவு கடாதல்
அஃதாவது:- தலைவன்
சிறைப்புறமாக, தோழி தினைக்கதிர் முதிர்ந்து விட்டன என்றும், இனி நமர் அவற்றை
அரிந்து விடுவராதலின் இனி நமக்குத் தினைப்புனங்காவலும் ஈண்டு விளையாடுதலும் இல்லை
என்று அவன் கேட்பத் தலைவிக்குக் கூறுவாள் போன்று கூறியது. அதற்குச் செய்யுள்:
மாதிடங் கொண்டம்
பலத்துநின்
றோன்வட வான்கயிலைப்
போதிடங் கொண்டபொன் வேங்கை
தினைப்புனங் கொய்கவென்று
தாதிடங் கொண்டுபொன் வீசித்தன்
கள்வாய் சொரியநின்று
சோதிடங் கொண்டிதெம் மைக்கொடு
வித்தது தூமொழியே.
|
ஏனல் விளையாட் டினியில் லையென மானற் றோழி மடந்தைக் குரைத்தது.
(இ-ள்) தூமொழி-தூயமொழியையுடையாய்;
மாது இடம் கொண்டு அம்பலத்து நின்றோன்-உமையம்மையாரை
|