மூலமும் உரையும்443



திருக்கோவையார் 202 அம் செய்யுள்
ஆதங்கூறல்

     அஃதாவது: போக்கருமை கூறிய தலைவனுக்குத் தோழி பெருமானே! எம்பெருமாட்டி நின்னோடு போகப்பெறின் அவளுக்கு வெஞ்சுரமுந் தண்சுரமாம்; ஆதலின் நீ அருமை கூறாது அவளை அழைத்துபோ! என்று தலைவியின் ஆதரங் கூறாநிற்றல் என்றவாறு. அதற்குச் செய்யுள்:-

பிணையுங் கலையும்வன் பேய்த்தே
     ரினைப்பெரு நீர்நசையால்
அணையு முரம்பு நிரம்பிய
     வத்தமு மையமெய்யே
இணையு மளவுமில் லாவிறை
     யோனுறை தில்லைத்தண்பூம்
பணையுந் தடமுமன் றேநின்னொ
     டேகினெம் பைந்தொடிக்கே.

"அழல்தடம் புரையும் அருஞ்சுர மதுவும் நிழல்தட மவட்கு நின்னொடேகி னென்றது"

     (இ-ள்) பிணையுங் கலையும் - பிணைமானும் கலைமானும்; பெநீர் நசையால்- மிகுந்த நீர்வேட்கையினால்; வன்பேய்த் தேரினை அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும் - பெரிய பேய்த் தேரினைச் சென்று அணுகும் முரம்பால் நிரம்பிய சுரமும்; ஐய-ஐயனே; நின்னோடு ஏகின் மெய்யே எம் பைந்தொடிக்கு-நின்னோடு செல்லின் மெய்யாக எம்முடைய பசிய தொடியினையுடைய தலைவிக்கு; இணையும் அளவும் இல்லா இறையோன் உறை தில்லைப்பும் தண்பணையும் தடமும் அன்றே - ஒப்பும் எல்லையும் இல்லாத இறையோன் உறைகின்ற தில்லையின்கண்ணுள்ள பூக்களையுடைய மருதநிலமும் பொய்கையும் அல்லவோ நீ இவ்வாறு கூறுவதென்னை என்க.

     (வி-ம்.) பிணை-பெண்மான். கலை-ஆண்மான். பேய்த்தேர்-கானல்நீர், நசை-வேட்கை. முரம்பு-கல் விரவிய மேட்டு நிலம். அத்தம்-சுரம். இணை-ஒப்பு. பணை- மருதநிலம். நடம்-பொய்கை. பைந்தொடி: அன்மொழித் தொகை. இது புகழாப் புகழ்ச்சி என்னும் அணி. மெப்பாடு - அழுகை. பயன் - தலைமகள் நிலைமையுணர்த்துதல்.

 
 

செய்யுள் 56

நேரிசையாசிரியப்பா

 
   
  நெடுவரைப் பொங்கர்ப் புனமெறி காழகிற்
கடும்புகை வானங் கையுறப் பொதிந்து