46கல்லாடம்[செய்யுள்



திருக்கோவையார் 145 ஆ செய்யுள்
மயிலோடு கூறி வரைவு கடாதல்

     அஃதாவது: பிரிவருமை கூறி வரைவு கடாவிய தோழி தலைவன் சிறைப்புறமாக வந்துழி அவன்வர வுணராதாள்போன்று பிரிவாற்றாமையோடு தலைவியையும் அழைத்துக் கொண்டு அப்புனங்காவல் விட்டுச் செல்பவன் மயிலை நோக்கி ‘மயில்காள் யாங்கள் வருத்தத்தோடு இல்லிற்குச் செல்கின்றோம்: யாங்கள் சென்றபின் இங்கு ஒருவர் வருவார். வந்தால், இங்கு நின்றும் போன மகளிர்கள் அன்புடையார் துணியாதவற்றைத் துணிந்து போயினர் என்று அவர்க்குச் சொல்லுங்கோள்’ என்று கூறி அவன் கேட்ப வரைவுகடாவியது. அதற்குச் செய்யுள்:

கணியார் கருத்தின்று முற்றிற்
     றியாஞ்சென்றுங் கார்ப்புனமே
மணியார் பொழில்காண் மறத்திற்கண்
     டீர்மன்னு மம்பலத்தோன்
அணியார் கயிலை மயில்கா
     ளயில்வே லொருவர்வந்தால்
துணியா தனந்துணிந் தாரென்னு
     நீர்மைகள் சொல்லுமினே.

நீங்கரும் புனம்விடு நீள்பெருந் துயரம் பாங்கி பகர்ந்து பருவல லுற்றது.

     (இ-ள்) கணியார் கருத்து இன்று முற்றிற்று-காலக் கணிதராகிய வேங்கையாருடைய கருத்து இன்று நிறைவேறிற்று ஆதலால்; யாம் சென்றும்-யாங்கள் இவ்விடத்தினின்றும் எம்மில்லிற்குப் போகின்றோம்; கார்ப்புனமே-கரிய தினைப்புனமே; மணி ஆர் பொழில்காள்-மணிகள் நிரம்பிய பொழில்களே, மறத்திர் கண்டீர்-அவ்வேங்கையாரொடு பயின்றீராகலின் நீயிர் எம்மை மாந்து விடுவீர்; மன்னும் அம்பலத்தோன் அணி ஆர் இறைவனுடைய அழகுபொருந்திய கைலை மலையினின்றும் இங்கு வந்துள்ள மயில்காள்; அயில்வேல் ஒருவர் வந்தால்-கூரிய தம்வேற்படையே தமக்குத் துணையாகத் தமியே வரும் ஒருவர் இங்கு வந்தால்; துணியாதன துணிந்தார் என்னும் நீர்மைகள் சொல்லுமின்-அவர்க்கு இங்கிருந்த மகளிர் அன்புடையார் துணியாதவற்றைச் செய்யத் துணிந்தார் என்னும் எம் தன்மைகளைச் சொல்லுங்கள் என்க.

     (வி-ம்.) கணியார் என்றது வேங்கைமரத்தை. வேங்கை மலருங் காலமே தினை அரியுங் காலமாம். எனவே வேங்கை மரம் மலர்ந்து