460கல்லாடம்[செய்யுள்



திருக்கோவையார் 302 ஆம் செய்யுள்
வாழ்க்கை நலங்கூறல்

     அஃதாவது: மணமனை சென்று மீண்டு வந்த செவிலி மகிழ்ந்து நற்றாயை நோக்கி நின் மகளுடைய இல்வாழ்க்கைக்கு நின்னுடைய இல்வாழ்க்கையே ஒப்பாவதல்லது வேறுவமையில்லை என்றுகூறி மகிழ்வித்தல் என்றவாறு. அதற்குச் செய்யுள்:-

தொண்டின் மேவுஞ் சுடர்க்கழ
     லோன்றில்லைத் தொன்னகரிற்
கண்டின மேவுமி னீயவ
     ணின்கொழு நன்செழுமென்
றண்டின மேவுதிண் டோளவன்
     யானவ டற்பணி வோள்
வண்டின மேவுங் குழலா
     ளயன்மன்னு மிவ்வயலே.

"மணமனைச் சென்று மகிழ்தரு செவிலி அணிமனைச் கிழத்திக் கதன்சிறப் புரைத்தது"

     (இ-ள்) தொண்டு இனம் மேவும் - மெய்யடியாரது கூட்டத்தை இடையறாது பொருந்துகின்ற; சுடர்க்கழலோன் தில்லை தொல்நகரில் - ஒளியுடைய வீரக்கழலணிந்த அம்பலவாணனது திருத்தில்லையாகிய பழைய நகரிடத்தே; கண்ட இல் மேவும் நம் இல்-யான் சென்று கண்ட நம்மகளின் இல்லம் யாம் உறைகின்ற இவ்வில்லத்தையே ஒக்கும்; அவள் - நீ அவ்வில்லத் தலைவியாகிய அவள் தானும் இவ்வில்லத் தலைவியாகிய நின்னையே ஒப்பாவள்; தண்டு இனம் மேவும் செழுமெல் திண்தோள் அவன் - தூண்களை ஒத்த வளமுடைய மெல்லிய திண்ணிய தோளையுடைய அவள் கணவன்; நின் கொழுநன் உன் கணவனையே ஒப்பாவான்; யான் அவள் தன் பணிவோள் அவளைப் பணிந்து குற்றேவல் செய்யும் என் மகளாகிய தோழியோ என்னொடு ஒக்கும்; வண்டு இனம் மேவும் குழலாள் அயல் - வண்டுக் கூட்டங்கள் பொருந்தும் கூந்தலையுடைய நம் மகளது அயலில் உள்ளோர்; இ அயல் - இங்கு நம அயலில் உள்ளோரை ஒப்பர் அவள் வாழ்க்கை நலத்திற்கு வேறு உவமை சொல்ல இயலாது என்க.

     (வி-ம்.) தொண்டு - தொண்டர். கண்ட என்பது கடைக் குறைந்து நின்றது. மகளிர்க்கு ஊற்றினிமை பயத்தலின் தலைவன் தோளிற்கு மென்மை கூறினாள். இரண்டாதலின் தண்டினம் என்றாள். மன்னும் என்பது அசைநிலை. பெரும்பான்மையும் என்பதுபட நின்ற