மூலமும் உரையும்461



தெனினுமமையும். கண்டென்பதனை தன் மைவினை எனக் கொள்வாரு முளர். மெய்ப்பாடு - உவகை. பயன்- மகிழ்வித்தல்.

 
 

செய்யுள் 62

நேரிசையாசிரியப்பா

 
   
5
  பெண்ணெனப் பெயரிய பெருமகட் குலனு
ளுணாநில னுண்டு பராயவப் பெருந்தவங்
கண்ணுற வுருப்பெருங் காட்சிய தென்னக்
கருவுயிர்த் தெடுத்த குடிமுத லன்னை
நின்னையுங் கடந்த தன்னவ ளருங்கற்
10
  பரிகடன் மூழ்கிப் பெறுமருள் பெற்ற
நிலமகட் கடந்தது நலனவள் பொறையே
யிருவினை நாடி யுயிர்தொறு மமைத்த
வூழையுங் கடந்தது வாய்மையின் மதனே
கற்பகம் போலு மற்புதம் பழுத்த
15
  நின்னிலங் கடந்த தன்னவ ளில்லம்
பேரா வாய்மைநின் னூரனைக் கடந்தது
மற்றவ ளூரன் கொற்றவெண் குடையே
யேழுளைப் புரவியோ டெழுகதிர் நோக்கிய
சிற்றிலை நெருஞ்சிற் பொற்பூ வென்ன
20
  நின்முகக் கிளையினர் தம்மையுங் கடந்தனர்
மற்றவட் பார்த்த மதிக்கிளை யினரே
யுடனிழன் மான வுனதரு ணிற்கு
மென்னையுங் கடந்தன ளன்னவட் கினியோள்
கொலைமதின் மூன்று மிகலறக் கடந்து
25
  பெருநில வெறித்த புகர்முகத் துளைக்கைப்
பொழிமதக் கறையடி யழிதரக் கடந்து
களவுத் தொழில்செ யரிமக னுடலந்
திருநுத னோக்கத் தெரிபெறக் கடந்து
மாறுகெயாண் டறையு மதிநூற் கடல்கிளர்
30
  சமயக் கணக்கர் தந்திறங் கடந்து
புலனொடு தியங்கும் பொய்யுளங் கடந்த
மலருட னிறைந்து வான்வழி கடக்கும்
பொழினிறை கூடற் புதுமதிச் சடையோன்
மன்னிலை கடவா மனத்தவர் போல