மூலமும் உரையும்467



திருக்கோவையார் 358 ஆம் செய்யுள்
பள்ளியிடத்தூடல்

     அஃதாவது: வாயின் மறுத்த தலைமகள், ஆற்றாமையே வாயிலாகப் புக்குப் பள்ளியிடத்தானாகிய தலைமகனோடு, நின்னை யிடைவிடாது நுகர்தற்கு முற்காலத்துத் தவத்தைச் செய்யாத தீவினையோமை நோவாது, இன்றிவ்வாறாகிய நின்னை நோவதென்னோ அது கிடக்க, நின் காதலிமார் புறமேகற்று நினக்குப் புதிதாகச் செய்த அப்புல்லுதலை யாஞ் செய்யமாட்டோம்; அதனாலெம்மைத் தொடாதே; எங்கலையை விடுவாயாகவெனக் கலவி கருதிப் புலவாநிற்றல் என்றவாறு. அதற்குச் செய்யுள்:-

தவஞ்செய் திலாதவெந் தீவினை
     யேம்புன்மைத் தன்மைக்கெள்ளா
தெவஞ்செய்து நின்றினி யின்றுனை
     நோவதெ னத்தன்முத்தன்
சிவன்செய்த சீரரு ளார்தில்லை
     யூரநின் சேயிழையார்
நவஞ்செய்த புல்லங்கண் மாட்டேந்
     தொடல்விடு நற்கலையே.

"பீடிவர் கற்பிற் றோடிவர் கோதை ஆடவன் றன்னோ டுடி யுரைத்தது"

     (இ-ள்) அத்தன் - உலகத்துள்ளாரெல்லார்க்குந் தந்தை; முத்தன்- இயல்பாகவே பாசங்களி னீங்கியவன்; சிவன் - எவ்வுயிர்க்கும் எப்பொழுதும் நன்மையைச் செய்தலாற் சிவன்; செய்த சீர் அருள் ஆர்தில்லை ஊர - அவனாற் செய்யப்பட்ட சீரியவருணிறைந்த தில்லையிலூரனே; தவம் செய்திலாத வெம தீவினையேம்- முற்காலத்துத் தவத்தைச் செய்யாத வெய்ய தீவினையையுடைய யாம்; புண்மைத் தன்மைக்கு எள்ளாது- நின்னாலாதிக்கப்படாத எமது புன்மைத் தன்மை காரணமாக எம்மையே யிகழாது; எவம் செய்து நின்று இன்று இனி உனை நோவது என்- நினைக்குத் துன்பத்தைச் செய்யாநின்று இப்பொழுது இனி நின்னை நோதலென்னாம்! அது கிடக்க; நின் சேயிழையார் நவம் செய்த புல்லங்கள் மாட்டேம் -நின்னுடைய சேயிழையார் நினக்குப் புதிதாகச் செய்த புல்லுதல்களையாம் செய்யமாட்டேம் அதனால்; நற்கரை தொடல் - எமது நல்ல மேகலையைத் தொடாதொழி; விடு - விடுவாயாக என்றவாறு.

     (வி-ம்.) எவ்வம் எவமென நின்றது. காதலில்லையாயினுங் கண்ணோட்ட முடைமையான் இகழ்ந்து வாளாவிருப்ப மாட்டாமையின், எம்புலவியான் நினக்குத் துன்பமாந் துணையேயுள்ள தென்னுங்