468கல்லாடம்[செய்யுள்63]



கருத்தான், எவஞ் செய்து நின்றென்றாள். இனி யென்பது நீயிவ்வாறாயின பின்னென்னும் பொருட்டாய் நின்றது. சிவன் செய்த சீரருளார் தில்லையூர வென்றதனான், நின்னாற் காயப்பட்டாரானுங் காதலிக்கப் படாநின்றா யெனவும், தவஞ் செய்திலாத வெந்தீவினையே மென்றதனான், எம்மாற் காதலிக்கட்டாரானுங் காயப்படாநின்றே மெனவுங் கூறியவாறாம். புல்லென்பது புல்லமென விரிந்து நின்றது. புல்லமென்பதனைப் புன்மையென்று நின் சேயிழையார் புதிதாகச் செய்த குறிகளைப் பொறுக்கமாட்டேமென் றுரைப்பினு மமையும். எவன் செய்த நின்றெனப் பாடமோதி, தவஞ் செய்திலாத வெந்தீவினையேம் இன்றுன்னை நோவது என் செய்து நின்றென்றும் என்னத்தனென்று முரைப்பாருமுளர். எள்காதென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு- வெகுளி, பயன் - புணர்தல்.

 
 

செய்யுள் 63

நேரிசையாசிரிப்பா

 
   
5
  நீரர மகளிர் நெருங்குறப் புகுந்து
கண்முகங் காட்டிய காட்சிய தென்னப்
பெருங்குலை மணந்த நிறைநீர்ச் சிறைப்புனன்
மணநிறப் படாமுது கிடையறப் பூத்துச்
சுரும்பொடு கிடந்த சொரியிதழ்த் தாமரை
10
  கண்ணினுங் கொள்ளா துண்ணவும் பெறாது
நிழறலை மணந்த புனல்கிட வாது
விண்ணுடைத் துண்ணும் வினைச்சூர் கவர்ந்த
வானவர் மங்கையர் மயக்கம் போலப்
பிணர்க்கரு மருப்பிற் பிதிர்பிட வுழக்கி
15
  வெண்கார்க் கழனிக் குருகெழப் புகுந்து
கடுக்கைச் சிறுகா யமைத்தவாற் கருப்பை
யிணையெயி றென்ன விடையிடை முட்பயில்
குறும்புதன் முண்டகங் கரும்பெனத் துய்த்துச்
செங்கட் பகடு தங்குவய லூரர்க்
20
  கருமறை விதியு முலகியல் வழக்குங்
கருத்துறை பொருளும் விதிப்பட நினைந்து
வடசொன் மயக்கமும் வருவன புணர்த்தி
யைந்திணை வழுவா தகப்பொரு ளமுதினைக்
குறுமுனி தேறவும் பெறுமுதற் புலவர்க
  ளேழெழு பெயருங் கோதறப் பருகவும்
புலனெறி வழக்கிற் புணருல கவர்க்கு