மூலமும் உரையும்47



தினயரிவித்து எம்மை இவ்விடத்தனின்றும் போக்கியது என்று அதனைச் சினந்து கூறுவாள் கணியார் என ஆர் ஈற்றால் கூறினாள். கணியார் கருத்தாவது, இம்மகளிரை இவ்விடத்தினின்றும் போக்குதல் வேண்டும் என்பது. அதன் கருத்து முற்றுதலாவது தினை அரியப்பட்டமையால் அம்மகளிர் இல்லிற்குச் செல்லுதல் இதனால் உணர்த்தியதாவது-தினை அரியப்பட்டமையால் யாங்கள் இல்லிற்குச் செல்கின்றோம். இனி எம்மைக் காணுதல் அரிது என்பதாம். ஆதலால் நீ விரைந்து வரைந்து கொள்க என்பது குறிப்பெச்சம்: சென்று-செல்வேம்; வினைமுற்று. புனமும் பொழிலும் இரக்கமற்ற வேங்கை மரத்தோடு பயின்றமையால் மனந்திரிந்து எம்மை மறத்தல் கூடும் என்பாள் புனமே பொழில்காள் நீயிர் மறத்திர் என்றாள். மன்னுதல்-நிலை பெறுதல். மயில்களைப் புகழ்வாள் ‘கயிலை மயில்காள்’ என்றாள். பேரருளினோன் கயிலையினுள்ளீராகலின் நீர் கண்ணோட்டமுடையீர் என்பது கருத்து. கயிலையினின்றும் ஈண்டு வந்த மயில்காள் என்றவாறு. தலைவனுக்கு அடையாளங் கூறுவாள் அயில்வேல் ஒருவர் என்றாள். அன்புடையார் துணியாதனவாவன பிரிதலும் வரையுந்துணையும் ஆற்றி இருத்தலுமாம். புனமே பொழில்காள் மயில்காள் என்று கூட்டி, நீர் எம்மை மறப்பீராயினும் மறவாது சொல்லுமி னென்று உரைப்பாருமுளர். மெய்ப்பாடும் பயனும் அவை.

 
 

செய்யுள் 4

நேரிசையாசிரியப்பா

 
   
5
  அண்டமீன் றளித்த கன்னிமுனி வாகத்
திருநுதன் முஐத்த கனறெறு நோக்கினில்
ஆயிர மணிக்கரத் தமைத்தவான் படையுடன்
சுயம்பெறு வீரனைத் தந்தவன் றன்னால்
உள்ளத் தருளுந் தெய்வமும் விடுத்த
10
  இருமண்மனத் தக்கன் பெருமக முண்ணப்
புகதே வினர்தம் பொருகடற் படையினை
ஆரிய வூமன் கனவென வாக்கிய
கூடற் பெருமான் பொதியப் பொருப்பகத்
தருவியஞ் சார லிருவியம் புனத்தினும்
15
  மயிலுங் கிளியும் குருவியும் படிந்து
நன்றி, செய்குநர்ப் பிழைத்தோர்க் குய்வில வென்னும்
குன்றா வாய்மை நின்றுநிலை காட்டித்
தங்குவன கண்டும் வலிமனங் கூடி
ஏகவுந் துணிந்தன மெம்பெரும் படிறு
  சிறிதுநின் றியம்ப வுழையினங் கேண்மினின்
றூற்றெழு மிருகவுட் பெருமதக் கொலைமலைக்
கும்ப மூழ்கி யுடற்குளித் தோடப்