மூலமும் உரையும்491



திருக்கோவையார் செய்யுள் : 394
ஊடனீட வாடியுரைத்தல்

     அஃதாவது : தணிக்கத் தணியாது மிகுத்துரைத்துத் தலைமகள் மேன்மேலு மூடாநிற்ப, அன்று அம்மலையிடத்துத் தன்னையெய்துதற்கோருபாய மின்றி வருந்தோநிற்ப, யானுய்யும் வண்ணம் தன்னிணை மலர்க்கண்ணினது இனிய நோக்கத்தைத் தந்தருளி என்னைத் தன் வயமாக்கிய நிம்பெண்ணமுதம் அதுவன்று ; இது நம்மை வருத்துவதொரு மாய்மாமெனத் தன்நெஞ்சிற்குச் சொல்லி ஊடனீடித் தலைமகன் வாடா நிற்றல் என்றவாறு, அதற்குச் செய்யுள்-

திருந்தே னுயநின்ற சிற்றம்
     பலவர்தென் னம்பொதியி
லிருந்தே னுயவந் திணைமலர்க்
     கண்ணினின் நோக்கருளிப்
பெருந்தே னெனநெஞ் சுகப்பிடித்
     தாண்டநம் பெண்ணமிழ்தம்
வருந்தே லதுவன் றிதுவோ
     வருவதொர் வஞ்சனையே.

வாடா வூடல் நீடா வாடியது.

     (இ-ள்) திருந்தேன் உயநின்ற சிற்றம்பலவர் தென்னம் பொதியில்- ஒருவாற்றானுந் திருந்தாத யான் பிறவித் துன்பத்திற் பிழைக்க வந்து நின்ற சிற்றம்பலவரது தெற்கின்கணுளதாகிய பொதியிலிடத்து ; இருந்தேன் உயவந்து- ஒருமுயற்சியுமின்றியிருந்த யானுய்யும் வண்ணம் வந்து ; இணைமலர்க் கண்ணின் இந்நோக்கு அருளி - தன்னுடைய இணைந்த மலர்போலுங் கண்களினது உள்ளக்கருத்தை வெளிப்படுத்தும் நாணோடு கூடிய நோக்கமாகிய இனிய கடைக்கணோக்கத்தை முன்னெனக்குத் தந்து ; பெருந்தேன் என நெஞ்சு உகப்பிடித்து ஆண்டபெருந்தேன்போல வினிதாய் என்னெஞ்சமுருக என்னைப் பிடித்துத் தன்வயமாக்கிய ; நம்பெண் அமிழ்தம் அதுவன்று - நம் பெண் வடிவையுடைய அமிழ்தமாகிய அது இதுவன்று ; இதுவோ வருவது ஓர் வஞ்சனை -அதனான் நீ வருந்தாதொழி என்றவாறு.

     (வி-ம்.) ஓகாரம் : ஒழியிசைக்கண் வந்தது. தன்னை நோக்கியொரு முயற்சியுமில்லாத யான்பிறவித் துன்பத்திற் பிழைக்கத் தானே வந்து தன்னிணை மலர்க்கண்ணின் இனிய கடைக்கண் நோக்கத்தைத் தந்து பெருந்தேன் போன்றினிதாய், என் வன்மன நெழிக என்னை வலிந்து பிடித்தடிமை கொண்ட பெண்ணமிழ்தமென வேறுமொரு பொருள் விளங்கியவாறு கண்டுகொள்க. மெய்ப்ப்ாடு - அழுகை பயன் - தலைமகளைச் சிவப்பாற்றுவித்தல்.