492கல்லாடம்[செய்யுள்67]



 
 

செய்யுள் 67

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நிரைவளை யீட்டமுந் தரளக் குப்பையு
மன்னக் குழுவுங் குருகணி யினமுங்
கருங்கோட்டுப் புன்னை யரும்புதிர் கிடையு
முடவெண் டாழை யூழ்த்தமுண் மலரு
மலவன் கவைக்கா லன்னவெள் ளலகும்
10
  வாலுகம் பரப்பி வலைவலி தொற்றினர்க்
கீதென் வறியா தொன்றிவேள் ளிடையா
மாதுடைக் கழிக்கரைச் சேரியோர் பாங்கர்ப்
புள்ளொடு பிணங்கும் புட்கவ ராது
வெள்ளிற வுணங்கல் காவ லாக
15
  வுலகுயிர் கவருங் கொடுநிலைக் கூற்ற
மக்ளெனத் தரித்த நிலையறி குவனேல்
விண்குறித் தெழுந்து மேலவர்ப் புடைத்து
நான்முகற் றாங்குந் தேனுடைத் தாமரை
யிதழுங் கொட்டையுஞ் சிதறக் குதர்ந்து
20
  வானவ ரிறைவன் கடவுகார் பிடித்துப்
பஞ்செழப் பிழிந்து தண்புனல் பருகி
மைந்தெனப் பெயரிய நெடுமர மொடித்துக்
கண்ணுளத் தளவா வெள்ளுண வுண்டு
பொரியெனத் தாரகைக் கண்னுடல் குத்தி
25
  யடுந்திற வினைய கொடுந்தொழில் பெருக்கிய
மாயா வரத்த பெருங்குரு கடித்து
வெண்சிறை முடித்த செஞ்சமைடப் பெருமான்
கூடற் கிறையோன் குறியுருக் கிடந்த
விருபத முள்வைத் தவர்போன்
  மருவும லொருவு மதியா குவனே

(உரை)
கைகோள் : கற்பு. தலைவன் கூற்று

துறை : ஊடனீட வாடியுரைத்தல்

     (இ-ம்.) இதற்கு, “ கரணத்தின் அமைந்து முடிந்த காலை ” (தொல்.கற்பி.இ) எனவரும் நூற்பாவின்கண் பயங்கெழு துணையணை