496கல்லாடம்[செய்யுள்



திருக்கோவையர் செய்யுள்: 19
பங்கயத்தோடு பரிவுற்றுரைத்தல்

     அஃதாவது : மாலைப்பொழுதில் தலைவன் வரவினை நோக்கித் தலைவி வருந்தி நின்றாளாக, அப்பொழுது நீர்நிலையிலுள்ள தாமரை மலர்கள் குவிதல்கண்டு இம்மலர்கள் என்பால் அன்புகொண்டு இவள் வருத்தம் தீர்தற்பொருட்டு நீ விரைந்து வரல்வேண்டும் என்று ஞாயிற்றை நோக்கிக் கைகுவித்துத் தொழுகின்றன என்று உட்கொண்டு அவற்றின்பால் அன்புகூர்ந்து கூறியது என்றவாறு, அதற்குச் செய்யுள் :-

கருங்கழி காதற்பைங் கானலிற்
     றில்லையெங் கண்டர்லிண்டா
ரொருங்கழி காதர மூவெயில்
     செற்றவொற் றைச்சீலைசூழ்ந்
தருங்கழி காத மகலுமென்
     றூழென் றலந்துகண்ணீர்
வருங்கழி காதல் வனசங்கள்
     கூப்பு மலர்க்கைகளே.

முருகவிழ் கான லொடுபரி வுற்றது

     (இ-ள்) தில்லை எம் கண்டர் - தில்லைக்கண் எழுந்தருளியுள்ள எம்மிறைவனாகிய நீலகண்டர் ; விண்டார் ஒருங்குஅழி காதரம் மூ எயில் செற்ற- பகைவர் ஒருங்கே அழியும் அச்சத்தையுடைய மூன்று மதில்களையும் அழித்த ; ஒற்றைச்சீலை சூ்ழ்ந்து - ஒப்பற்ற வில்லாகிய மேருமலையினை வலம் சுற்றி ; அருங்கழி காதம் அகலும் என்றூழ் என்று - கடத்தற்கரியவாகிய மிக்க காவதங்களைக் கடந்து செல்லாநின்றது இஞ் ஞாயிறு இனி இவள் எவ்வாறு ஆற்றுவள் என்று வருந்தி ; கருங்கழி காதல் பைங்கானலின் அலந்து கண்ணீர் கண்ணும் உளவாகித் துன்புற்றுக் கண்ணீர் விடாநின்ற ; கழிகாதல் வனசங்கள்- என்பால் மிக்க காதலையுடைய இத்தாமரை ; மலர்க்கைகள் கூப்பும் - அந்த ஞாயிற்றை நோக்கி இவள் துயர் தீரும் பொருட்டு நீ விரைந்து வரவேண்டுமென்று தம் மலராகிய கைகளைக் கூப்பி இரவாநின்றன ; ஆதலால் இவை என்பால் அன்புடையன போலும் என்க.

     (வி-ம்.) கானலின் வளசங்களெனவும், தில்லையெங்கண்டர் செற்றவெனவுங் கூட்டுக. கானலிற் கைகூப்புமென வியைப்பினும்