|
|
செய்யுள்
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
சிலைநுதற்
கணைவிழித் தெரிவைய ருளமென
வாழ்ந்தகன் றிருண்ட நிரைநீர்க் கயத்து
ளெரிவிரிந் தன்ன பலவிதழ்த் தாமரை
நெடுமயல் போர்த்த வுடலொரு வேற்குக்
குருமணி கொழிக்கும் புனன்மலைக் கோட்டுழி |
10
|
|
நின்பதி
மறைந்த நெட்டிர வகத்துட்
குருகும் புள்ளு மருகணி சூழத்
தேனொடும் வண்டொடுந் திருவொடுங் கெழுமிப்
பெருந்துயி லின்பம் பொருந்துபு நடுநாட்
காணுநின் கனலினுட் கவர்மனத் தவரைக் |
15
|
|
கொய்யுளைக்
கடுமான் கொளுவிய தேரொடு
பூவுதிர் கானற் புறங்கண் டனனெனச்
சிறிதொரு வாய்மை யுதவினை யாயிற்
சேகரங் கிழித்த நிறைமதி யுடலங்
கலைகலை சிந்திய காட்சிய தென்னக் |
20
|
|
கடுமான்
கீழ்ந்த கடமலைப் பன்மருப்
பெடுத்தெடுத் துந்தி மணிக்குலஞ் சிதறிக்
கிளைஞர்க ணச்சாப் பொருளினர் போலச்
சாதகம் வெறுப்பச் சரிந்தகழ்ந்த தார்த்துத்
திரள்பளிங் குடைத்துச் சிதறுவ தென்ன |
25
|
|
வழியெதிர்
கிடந்த வுலமுடன் றாக்கி
வேங்கையும் பொன்னு மோருழித் திரட்டி
வரையர மகளிர்க் கணியணி கொடுத்துப்
பனைக்கைக் கடமா வெறுத்துறு பூழி
வண்டெழுந் தார்ப்ப மணியெடுத் தலம்பி |