திருக்கோவையார் செய்யுள் 223
பதிபரிசுரைத்தல்
அஃதாவது
: நகர் காட்டிக்கொண்டு சென்று அந்நகரிடைப்புக்கு அவ்விடத்துள்ள குன்றுகள், வாவிகள்,
பொலில்கள், மாளிகைகள், தெய்வப்பதி யிவையெல்லாந்த தனித்தனி காட்டி, இதுகாண்
நம்பதியாவதெனத் தலைமகளுக்குத் தலைமகள் பதிபரிசு காட்டாநிற்றல் என்றவாறு. அதற்குச்செய்யுள்
:-
செய்குன் றுவையிவை
சீர்மலர்
வாலி விசும்பியங்கி
நைகின்ற திங்களெய்ப் பாறும்
பொழிலவை ஞாங்கரெங்கும்
பொய்குன்ற வேதிய ரோதிட
முந்திட மிந்திடமு
மெய்குன்ற வார்சிலை யம்பல
வற்கிட மேந்திழையே.
|
கண்ணிவர் வளநகர் கண்டுசென் றடைந்து பண்ணியவர் மொழிக்குப் பதிபரி சுரைத்து.
(இ-ள்)
உவை செய்குன்று - உவைசெய்குன்றுகள் ; இவை சீர் மலர் வாவி- இவை நல்ல மலரையுடைய
வாவிகள் ; அவை விசும்பு இயங்கி கைகின்ற திங்கள் எய்ப்பு ஆறும் பொழில் - அவை
விசும்பின் கணியங்குதலான் வருந்துந் திங்கள் அயாவுயிர்க்கும் பொழில்கள் ; உந்திடம்
ஞாங்கர் எங்கும் பொய்குன்ற வேதியர் ஓதிடம் - உவ்விடம் மிசை யெங்கு மூலகத்திற்
பொய்முதலாகிய குற்றங்கெட மறையவர் மறைசொல்லுமிடம் ; பொய்முதலாகிய குற்றங்கெட
மறையவன் மறைசொல்லுமிடம் ; ஏந்திழை - ஏந்திழாய் ; இந்திடமும் எய்குன்ற வார்சிலை
அம்பலவற்கு இடம் - இவ்விடமும் எய்தற்குக் கருவியாகிய குன்றமாகிய நீண்ட வில்லையுடைய
அம்பலவற்கிருப்பிடம் இத்தன்மைத்திவ்வூர் என்றவாறு.
(வி-ம்.)
இவையென்பது தன் முன்னுள்ளவற்றை, உவையென்பது முன்னின்றவற்றிற் சிறிது சேயவற்றை அவையென்பது
அவற்றினுஞ் சேயவற்றை. முன் சொல்லப்பட்டவையே யன்றி இதனையுங் கூறுகின்றனென்பது கருத்தாகலின்,
இந்திடமுமென்னு மும்மை இறந்தது தழீஇயவெச்சவும்மை. உந்திடம் இந்திடமெனச் சுட்டீறு
திரிந்து நின்றன. பண்ணிவர் மொழி - பண்போலு மொழி, மெய்ப்பாடு - பெருமிதம்.
பயன் - இடங்காட்டுதல்.
செய்குன்றென்பது
இயற்கை மலைத்தோற்றம் பொதுளச் செயற்கையாகச் செய்யப்படுவது.
|