திருக்கோவையார் 278 ஆம் செய்யுள்
தேறாதுபுலம்பல்
அஃதாவது
: தலைமகனது வாய்மைகூறி வருத்தந் தணியாநின்ற தோழிக்கு, யானவர் கூறிய மொழியின்படியே
மெய்ம்மையைக் கண்டு வைத்தும், என்நெஞ்சமு நிறையு்ம் என்வயமாய் நிற்கின்ற வில்லை
; அதுவேயுமன்றி, என்னுயிரும் வருத்தம் பொறுத்தற்கரிதாகாநின்றது. இவை யில்வா றாதற்குக்
காரணம் யாதென்றறிகின் றிலேனெனத்தான்தேறாமை கூறிப் புலம்பாநிற்றல் என்றவாறு அதற்குச்
செய்யுள் :-
மன்செய்த முன்னாண்
மொழிவழியே
யன்ன வாய்மைகண்டு
மென்செய்த நெஞ்சு நிறையு நில்
வாவென நின்னுயிரும்
பொன்செய்த மேனியன் றில்லை
யுறாரிற் பொறையரிதாம்
முன்செய்த தீங்குகொல் காலத்து
நீர்மைகொன் மொய்குழலே.
|
தீதறு கண்ணி தேற்றத் தேறாது போதுறு குழலி புலம் பியது
(இ-ள்)
மொய் குழலே - மொய்த்த குழலையுடையாய் ; முன் நாள் மன்செய்வ மொழிவழியே அன்ன
வாய்மை கண்டும் - முற்காலத்து மன்னன் நமக்குதவிய மொழியின் படியே அத்தன்மைத்தாகிய
மெய்ம்மையைக் கண்டு வைத்தும் ; நெஞ்சும் நிறையும் நில்லா - என்னெஞ்சமும் நிறையு
மென்வரையவாய் நிற்கின்றில்; என்செய்த-இவையென் செய்தன; எனது இன் உயிரும்- அதுவேயுமின்றி
எனதினிய வுயிரும்; பொன் செய்த மேனியன்தில்லை உறாரின் பொறை அரிதாம்-பொன்னையொத்த
மேனியையுடையவனது தில்லையை யுறாதாரைப்போல வருத்தம் பொறுத்தலரிதாகா நின்றது; முன்
செய்த தீங்குகொல்- இவை யிவ்வாறாதற்குக் காரணம் யான் முன்செய்த தீவினையோ ;
காலத்துநீர்மை கொல் - அன்றிப் பிரியுங்காலமல்லாத இக்காலத்தின் இயல்போ அறிகின்றிலன்
என்றவாறு.
(வி-ம்.)
மொழிவழியே கண்டுமென வியையும். நெஞ்சநில்லாமையாவது நம்மாட்டு அவரதன்பு எத்தன்மைத்தோ
வென்றையப்படுதல். நிறைநில்லாமையாவது பொறுத்தலருமையான் அந்நோய் புறத்தார்க்குப்
புலனாதல், நில்லாதென்பது பாடமாயிற் றனித்தனி கூட்டுக. பொன்செய்த வென்புழிச் செய்தவென்பது
உவமச் சொல். உயிர் துன்ப முழத்தற்குக் காரணமாதலின், அதனையுந் துன்பமாக
|