522கல்லாடம்[செய்யுள்72]



குழல் - கூந்தல், மெய் - வாய்மை, கொல்; அசை, வியலிடம் - உலகம் - ஆதலால் அவர் கூறியபடியே விரைந்து வந்து நின்னை அளிசெய்வர் வருந்தற்க ! என்பது குறிப்பெச்சம், மெய்ப்பாடு - அழுகையைச்சார்ந்த பெருமிதம், பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

 
 

செய்யுள் 72

நேரிசையாசிரியப்பா

 
   
5
  திருமல ரிருந்த முதியவன் போல
நான்முகங் கொண்டறி நன்னர்நெஞ் சிருந்து
வேற்றருட் பிறவி தோற்றுவித் தெடுத்து
நிலமிரண் டளந்த நெடுமுகின் மான
வரக்கர்தங் கூட்டந் தொலைத்துநெய் யுண்டு
10
  களிற்றுரி புனைந்த கண்ணுதல் கடுப்ப
வில்லெடுத் தொன்னலர் புரமெரி யூட்டி
யினைவெவ் வுலகுந் தொழுதெழ திருவேற்
சரவணத் துதித்த பயன்கெழு கூடற்
பரங்குன் றுடுத்த பயன்கெழு கூடற்
15
  பெருநகர் நிறைந்த சிறுபிறைச் சென்னியன்
மாலையன் றேடி மறையறிந் தறியாத்
தன்னுரு வொன்றி லருளுரு விருத்திய
வாதி நாயக னகன்மலர்க் கழலிணை
நண்ணலர் கிளைபோற் றம்மனந் திரிந்துநந்
20
  துறைவன் றணக்க வறிகிலம் யாமே
பிணர்முடத் தாழை விரிமலர் குருகென
நெடுங்கழிக் குறுங்கய னெய்தலுண் மறைந்தும்
புன்னையம் பொதும்பர்க் குழைமுகங் குழைமுகங்
கருந்திரை சுமந்தெறி வெண்டா ளத்தினை
25
  யரும்பெனச் சுரும்பின மலர்நின் றிசைத்துங்
கலஞ்சுமந் திறக்குங் கரியினம் பொருப்பெனப்
பருகிய முகிற்குலம் படிந்துகண் படுத்தும்
பவளமின் கவைக்கொடி வடவையின் கொழுந்தெனச்
சுரவிளை குளிக்குநர் கலனிடைச் செறிந்தும்
  வெள்ளிற வுண்ண விழைந்துபுகு குருகினங்
கருங்கழி நெய்தலைக் காவல்செய் கண்ணென
வரவெயிற் றணிமுட் கைதையு ளடங்கியும்