திருக்கோவையார் செய்யுள் 360
அயலறிவுரைத்தவ எழுக்கமெய்தல்
அஃதாவது
: தலைவிக்குப் பூப்பு நிகழ்ந்தமையைத் தலைவனுக்கு அறிவிக்கும் பொருட்டு இல்லத்தார்
அவன்பால் செவ்வணி விடுக்கக் கருதினராக ; அதுகண்ட தலைவி அந்நிகழ்ச்சியினை அயலோர்
அறிவதற்கு நாணினளாய் அந்தோ அயலார் முன்னே இவளால் தலைவன் இக்குறி அறிந்தவிடத்து
ஒருத்தி அவனை நம்பால் அழைத்துவர அவனை நாம் எய்தும்படியாயிற்றே நம்முடைய பெண்தன்மை
என வருந்திக் கூறா நிற்றல் என்றவாறு, அதற்குச் செய்யுள் :-
இரவணை
யும்மதி யேர்நுத
வார்நுதிக் கோலஞ்செய்து
குரவணை யுங்குழ லிங்கிவ
ளாலிக் குறியறிவித்
தரவணை யுஞ்சடை யோன்றில்லை
யூரனை யாங்கொருத்தி
தரவணை யும்பரி சாயின
வாறுநந் தன்மைகளே.
|
உலகிய லறியச் செலவிட னுற்ற விழுத்தகை மாதர்க் கழுக்கஞ் சென்றது.
(இ-ம்.)
இரவு அணையும் மதி ஏர் நுதலார் நுதி - இரவினைச் சேருகின்ற பிறைபோலும் நுதலையுடைய
பரத்தை மகளிரின் முன்னிலையில் ; கோலம் செய்து- செவ்வணியாகிய கோலத்தைச் செய்து;
குரவு அணையும் குழல் இங்கு இவளால் இக்குறி அறிவித்து - குரவம்பூச் சேர்ந்த கூந்தலையுடைய
இத்தேரிாயால் இந்தக் குறியை அறிவித்து ; அரவு அணையும் சடையோன் தில்லை ஊரனை -
பாம்பு சேருஞ் சடையையுடைய கூத்தப் பெருமானுடைய திருத்தில்லையின்கண் எங்காதலனை; ஆங்கு
ஒருத்தி தர - பின்னர் அப்பரத்தையின் இல்லின்கணுள்ள அவள் தோழி ஒருத்தி அவனை
அழைத்துவந்து நமக்கு வழங்க; அணையும் பரிசு ஆயினவாறு நம் தன்மைகள் - நாம் அவனைச்
சேரும்படி ஆயினவாறு என்னையோ நம்முடைய பெண் தன்மைகள் என்க.
(வி-ம்.)
இரவு அணையும் மதி என்றது இருண்ட கூந்தலின் கீழிருக்கும் நெற்றிக்குவமையாக என்க. நுதலார்-ஈண்டுப்
பரத்தையர். நுதி - முன்னிலை, குரவு: ஆகுபெயர்; குரவம்பூ. குழல் இங்கிவள் என்றது தன்தோழியை.
ஊரன் - தலைவன், ஆங்கொருத்தி என்றது பரத்தையின் தோழியை, மறைக்கத் தகுந்த இந்நிகழ்ச்சியை
இவ்வாறு அயலார்க்கு அறிவிக்கும்படியும்
|