|
|
செய்யுள்
73
நேரிசையாசிரியப்ப
|
|
|
|
5
|
|
ஆடகச்
சயிலத் தோருடல் பற்றிக்
கலிதிரைப் பரவையுங் கனன்றெழு வடவையு
மடியினு நடுவினு மணைந்தன போலப்
பசுந்தழைத் தோகையுஞ் செஞ்சிறைச் சேவலுந்
தாங்கியு மலர்க்கரந் தங்கியு நிலைத்த |
10
|
|
பேரொளி
மேனியன் பாருயிர்க் கோருயிர்
மாவுடைக் கூற்ற மலரயன் றண்டங்
குறுமுனி பெருமறை நெடுமறை பெறாமுதல்
குஞ்சரக் கோதையுங் குறமகட் பேதையு
மிருந்தன விருபுறத் தெந்தையென் னமுதம் |
15
|
|
பிறந்தருள்
குன்ற மொருங்குறப் பெற்ற
மாதவக் கூடன் மதிச்சடைக் கரண
னிருபதந் தேறா விருளுள மாமென
விவளுளங் கொட்ப வயலுளங் களிப்ப
வரும்பொருட் செல்வி யெனுந்திரு மகட்கு |
20
|
|
மானிட
மகளிர் தாமுநின் றெதிர்ந்து
புல்லிதழ்த் தாமரை யில்லளித் தெனவு
முலகுவிண் பனிக்கு மொருசய மகட்குத்
தேவர்தம் மகளிர் செருமுக சேர்ந்து
வீரமங் கிந்தபின் விளிவது மானவு |
25
|
|
மிருளுட
வரக்கியர் கலைமகட் கண்டு
தென்றமிழ் வடகலை சிலகொடுத் தெனவு
நீரர மகளிர் பரந்தளங் கன்னியர்க்
காரெரி மணித்திர ளருளிய தெனவுஞ்
செம்மலர்க் குழலிவன் போயறி வுறுத்தக் |
|
|
கற்றதுங்
கல்லா துற்ற வூரனை
யவடர விவல்பெறு மரந்தையம் பேரினுக்
கொன்றிய வுவம மின்றிவ னுளவான் |