|
|
செய்யுள் 5
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
இரண்டுடே லொன்றாய்க் கரைந்துகண் படாமல்
அளவியல் மனநிலை பரப்புங் காலம்
தளைகரை கடந்த காமக் கடலுட்
புன்னுனிப் பனியென மன்னுத லின்றிப்
பீர மலர்ந்த வயாவுநோய் நிலையாது |
10
|
|
வளைகாய்
விட்ட புளியருந் தாது
செவ்வாய் திரிந்து வெள்வாய் பயவாது
மனைபுகை யுண்ட கருமண் ணிடந்து
பவள வாயிற் சுவைகா ணாது
பொற்குட முகட்டுக் அருமணி யமைத்தெனக் |
15
|
|
குங்குமக்
கொங்கையும் தலைக்கண் கறாது
மலர விழ்ந்த தாமரைக் கயலென
வரிகொடு மதர்த்த கண்குழி யாது
குறிபடு திங்க ளொருபதும் புகாது
பொன்பெய ருடையோன் றன்பெயர் கடுப்பத் |
20
|
|
தூண்ம
பயந்த மாணமர் குழவிக்கு
அரக்கர் கூட்டத் தமர்விளை யாட
நெருப்புமி ழாழி யீந்தரு ணிமலன்
கூடன் மாநக ராட வெடுத்த
விரித்த தாமரை குவித்த தாளோன் |
25
|
|
பேரருள்
விளையச் சிரிலர் போலத்
துலங்கிய வமுதங் கலங்கிய தென்ன
விதழ்குவித்துப் பணித்த குதலையுந் தெரியாது
முருந்து நிரைத்த திருந்துபற் றோன்றாது
தெய்வங் கொள்ளார் திணிமன மென்ன |
30
|
|
விரிதரு
கூழையுந் திருமுடி கூடாது
துணைமீன் காட்சியின் விளைகரு வென்னப்
பார்வையிற் றெழில்கள் கூர்விழி கொள்ளாது
மறுபுலத் தடுபகை வேந்தடக் கியதென
வடுத்தெழு கொலைமுலை பொடித்தன வன்றே |
|
|
செம்கண்
மாலை யிம்முறை யென்றால்
வழுத்தலும் வருதலுந் தவிர்த்து
மொழிக்குறி கூடாச் செவ்வே லோயே! |