மூலமும் உரையும்533



திருக்கோவையார் 316 ஆம் செய்யுள்
பிரிந்தமை கூறல்

     அஃதாவது: தம்மை வந்தடைந்த வேந்தனுக்கு தாமுதவிசெய்வாராக வெய்ய போரையுடைய பாசறைமேல் நமர் சென்றார் : இனியவ்வேந்தன் பகைவரா லிடப்பட்ட மதில் இன்றென்றாய் முடியுமோவெனத் தலைமகள் வேந்தற்குற்றுழிப் பிரிந்தமைதோழி தலைமகளுக்குக் கூறாநிற்றல் என்றவாறு. அதற்குச் செய்யுள் :-

போது குலாய புனைமுடி
     வேந்தர்தம் போர்முனைமேல்
மாது குலாயமென் னோக்கிசென்
     றார்நமர் வண்புலியூர்க்
காது குலாய குழையெழி
     லோனைக் கருதலர்போ
லேதுகொ லாய்விளை கின்றதின்
     றொனன்ா ரிடுமதிலே.

விறல்வேந்தர் வெம்முனைக்கண் திறல்வேந்தர் செல்வரென்றது.

     (இ-ள்) மாது குலாய மெல்நோக்கி - அழகுபொருந்திய மெல்லிய பார்வையினையுடையாய் ; போது குலாய புனைமுடி வேந்தர் தம் போர்முனைமேல் -பூ அழகுபெற்ற ஒப்பனை செய்யப்பட்ட முடியையுடைய வேந்தருடைய போரையுடைய பாசறை மேல் ; நமர்சென்றார் - நம்பெருமான் போயினர்; வண்புலியூர்க்காது குலாய குழை எழிலோனைக் கருதலர்போல்-வளவிய புலியூரின்கண் எழுந்தருளியுள்ள செவியின்கண் ஊசலாடா நின்ற குழையினாலுண்டாகிய அழகினையுடைய சிவபெருமானை நினையாத மடவோர்போல ; ஒன்னார் இடும் மதில் இன்று ஏதாய் விளைகின்றது - பகைவரால் இடப்பட்ட மதிலின் நிலை இன்று என்னாய் முடியுமோ என்க.

     (வி-ம்.) போது குலாயமுடி, புனைமுடி எனத் தனித்தனி கூட்டுக. முடிவேந்தர் என்பது தலைமைப்பற்றிப் பலர்பால் விகுதி பெற்ற ஒருமை, நோக்கி விளி, நினையாதவர் அழிவது போல ஒன்னார் மதிலும் அழியும் என்பது கருத்து. ஏதுகொலாய் என்புழிக் கொல் ; அசைநிலை. துணிவுபற்றிச் சென்றார் என இற்தகலத்தாற் கூறினாள். வினைமுடித்து கடிதுமீள்வர் என்பதுதோன்ற ஒன்னார் இடுமதில் இன்றே அழியும் என்று கூறினாளாம். மெய்ப்ப்ாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - வேந்தற்குற்றுழிப் பிரிவுணர்த்துதல்.

 
 

செய்யுள் 74

நேரிசையாசிரியப்பா

 
   
  மலரவன் பனிக்குங் கலினுங் குலமீ
னருகிய கற்புங் கருதியுண் ணடுங்கித்