திருக்கோவையார் 310 ஆம் செய்யுள்
கலக்கங்கண்டுரைத்தல்
அஃதாவது:
தலைவன் ஓற்பொருட்டு நம்மைப் பிரிந்து செல்லும் நினைவொன்றுடையார் என்று தோழி
தலைவனுக்குக் கூறுமளவிலே தலைவி பெரிதும் நெஞ்சு சுழன்று வருந்தினாளாக, அதுகண்ட தோழி
அந்தோ ! இச்சொல்லே இவள் செவியின்கண் காய்ந்த வேல்போலச் சென்று சுடுவதாயிற்று.
இனி அவன் பிரிவினை இவள் எவ்வாறு ஆற்றியிருப்பள் என்று தன்னுள்ளே கூறியது என்றவாறு,
அதற்குச் செய்யுள் :-
கற்பா மதிற்றில்லைச்
சிற்றம்
பலமது காதல்செய்த
விற்பா விலங்கலெங் கோனை
விரும்பவர் போலவன்பர்
சொற்பா விரும்பின ரென்னமெல்
லோதி செவிப்புறத்துக்
கொற்பா விலங்கிலை வேல்குளித்
தாங்குக் குறுகியதே.
|
ஓதற் ககல்வர் மேதக் கவரெனப் பூங்கொடி கலக்கம் பாங்கிகண் டுரைத்து,
(இ-ள்)
கல் பா மதில் தில்லைச்சிற்றம்பலம் அது காதல் செய்த- கல்லாலியன்ற பரந்த மதிலையுடைய
திருத்தில்லையின் கண் சிற்றலம்பலத்தை விரும்பிய ; வில்பா விலங்கல் எங்கோனை
விரும்பலர் போல - வில்லாகச் செயப்பட்ட பரந்த மலையையுடைய எம்முடைய கடவுளை விரும்பாத
மடவோரைப்போல ; அன்பர் சொல் பா விரும்பினர் என்ன - நங்காதலர் சொல்லானியன்ற
செய்யுள்களாகிய நூல்களைக் கற்க விரும்பினோரென்று யான் சொல்லுமளவிலே ; மெல் ஓதி
செவிப்புறத்து - அச்சொல் மெல்லிய கூந்தலையுடைய எம்பெருமாட்டியின் செவியின்கண்;
கொல்பா இலங்கு இலைவேல்குளித்து ஆங்குக் குறுகியது - கொற்றொழில் பரந்த விளங்கும்
இலையையுடைய வேல்சென்று மூழ்கினாற்போலச் சென்று எய்திற்று ; இனி இவள் அவன் பிரிவை
எங்ஙனம் ஆற்றியிருப்பள் என்க.
(வி-ம்.)
பொருப்பு வில்லிமேல் விருப்புடையார் கல்விக்கடல் நீந்தி வருந்தாமையின் விரும்பலர்போலச்
சொற்பா விரும்பினர் என்றாள். இனி வருந்த என்பதொரு சொல்லை விரித்து விரும்பலர்
போல வருந்த அச்சொல் குறுகிய தென்றுரைப்பினும் அமையும். இது பூங்கொடிகலக்கம் பாங்கி
தன்னுள்ளே சொல்லியது. இதனைத் தலைவனுக்குக் கூறியதென்றுரைப்பாருமுளர். சிற்றம்பலமது
என்புழி அது பகுதிப்பொருளது விலங்கல் - மலை, சொற்பா - சொல்லா
|