|
|
செய்யுள்
76
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
கடன்மக ளுள்வைத்து வடவைமெய் காயவு
மலைமக டழற்றரு மேனியொன் றணைக்கவு
மாசறு திருமகண் மலர்புகுந் தாயிரம்
புறவிதழ்ப் புதவடைத் ததன்வெதுப் புறுக்கவுஞ்
சயமகள் சீற்றத் தழன்மனம் வைத்துப் |
10
|
|
திணிபுகும்
வென்றிச் செருவழல் கூடவு
மையர் பயிற்றிய விதியழ லோம்பவு
மவ்வனற் கமர ரனைவரு மணையவு
முன்னிடைக் காடன் பின்னெழ நடந்து
நோன்புறு விரதியர் நுகரவுள் ளிருந்தென் |
15
|
|
னெஞ்சக
நிறைந்து நினைவினுண் மறைந்து
புரையறு மன்பினர் விழிபெறத் தோற்றி
வானவர் நெடுமுடி மணித்தொகை திரட்டிப்
பதுக்கைசெய் யம்பலத் திருப்பெரும் பதியினும்
பிறவாப் பேரூர்ப் பழநக ரிடத்து |
20
|
|
மகிழ்நடம்
பேய்பெறும் வடவனக் காட்டினு
மருமறை முடியினு மடியவ ருளத்தினுங்
குனித்தரு ணாயகன் குலமறை பயந்தோ
னருந்தமிழ்க் கூடற் பெருந்தவர் காண
வெள்ளியம் பலத்துட் டுள்ளிய ஞான்று |
25
|
|
நெருப்பொடு
சுழலவும் விருப்பெடுத் தவ்வழல்
கையினிற் கொள்ளவுங் கரியுரி மூடவு
மாக்கிய பனிப்பகைக் கூற்றிவை நிற்க
வாங்கவர் துயர்பெற வீன்றவென் னொருத்தி
புகல்விழு மன்பதற் கின்றி |
|
|
மகவினைப்
பெறலாம் வரம்வேண் டினளே. |
(உரை)
கைகோள்: கற்பு. தலைவன் கூற்று.
துறை: முன்பனிக்கு நொந்துரைத்தல்.
(இ-ம்)
இதற்கு, அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின் (தொல். கற்பி. 6) எனவரும் நூற்பாவின்கண்
கிழவனை மகடூஉப்
|