மூலமும் உரையும்553



திருக்கோவையார் 390 ஆம் செய்யுள்
அணைந்தவழியூடல்

     அஃதாவது: தோழியாலூடல் தணிவிக்கப்பட்டுப் பள்ளியிடத்தாளாகிய தலைமகள், “நீ செய்கின்றவிதனையறியின் நின் காதலிமார் நின்னை வெகுள்வர்; அதுகிடக்க, யாம் மேனிமுழுதுஞ் சிறுவனாலுண்டாக்கப்பட்ட பால்புலப்படுந் தன்மையையுடையேம்; அதன்மேல் யாமும் நீ செய்கின்றவிக் கள்ளத்தை விரும்பேம்; அதனால் எங்காலைத் தொடாதொழி; எங்கையை விடுவாயாக’ எனத் தலைமகன் றன்னை யணைந்தவழி ஊடா நிற்றல். அதற்குச் செய்யுள்:-

சேறான் றிகழ்வாயற் சிற்றம்
     பலவர்தில் லைநகர்வாய்
வேறான் றிகழ்கண் ணிளையார்
     வெகுள்வர்மெய்ப் பாலன்செய்த
பாறான் றிகழும் பரிசின
     மேவும் படிறுவவேங்
காறான் றொடறொட ரேல்விடு
     தீன்டலெங் கைத்தலமே.

தெளிபுன லூரன் சென்றணைந் தவழி ஒளிமதி நுதலி யூடி யுரைத்தது.

     (இ-ள்) சேல் திகழ் வயல்-சேல் விளங்கும் வயலையுடைய; சிற்றம்பலவர் தில்லை நகர்வாய் வேல் திகழ்கண் இளையார்-சிற்றம்பலவரது தில்லை நகரிடத்துளராகிய வேல்போலுங் கண்ணையுடைய நின் காதலிமாராகிய விளையவர்; வெகுள்வர்-நீ செய்கின்ற விதனை யறியின் நின்னை வெகுள்வர், அதுவேயுமன்றி; மெய் பாலன் செய்த பால் திகழும் பரிசினம்-மேனி சிறுவனாலுண்டாக்கப்பட்ட பால்புலப்படுந் தன்மையையுடையேமாதலின் நினைக்குத் தகேம்; மேவும் படிறு உவவேம்-இதன்மேலே யாமும் நீயும் மேவி நாணின்மையோடு கூடிய கள்ளத்தை விரும்பேம்; கால்தொடல்-அதனால் எங்காலைத் தொடாதொழி; தொடரேல்-எம்மைத் தொடரவேண்டா; எம் கைத்தலம் தீண்டல்-எங்கைத்தலத்தைத் தீண்டற்பாலையல்லை; விடு-விடுவாயாக என்க.

     (வி-ம்.) திகழ்வயற்றில்லையென வியையும். பால் திகழுமென்னும் இடத்துநிகழ்பொருளின்வினை மெய்யாகிய விடத்துமேலேறி நின்றது. நான் கிடத்தும் தானென்பது அசைநிலை. பரிசினமேனு மென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு-வெகுளி. பயன்-ஊடநீங்குதல்.