554கல்லாடம்[செய்யுள்78]



 
 

செய்யுள் 78

நேரிசையாசிரியப்பா

 
   
5
  மதியமுடல் குறைந்த வெள்ளாங் குருகினம்
பைங்கா றடவிச் செங்கய றுரந்துண்டு
கழுக்கடை யன்னதங் கூர்வாய்ப் பழிப்புல
வெழின்மதி விரித்தவெண் டளையிதழ்த் தாமரை
மலர்மலர் துவட்டும் வயலணி யூர
10
  கோளகைக் குடிலிற் குனிந்திடைந் தப்புறத்
திடைநிலை யற்ற படர்பெரு வெளியகத்
துடன்முடக் கெடுத்த தொழில்பெறு வாழ்க்கைக்
கவைத்தலைப் பிறையெயிற் றிருளெழி லரக்க
னமுதமுண் டிமையா தவருமங் கையருங்
15
  குறவருங் குறவத் துணையரு மாகி
நிலம்பெற் றிமைத்து நெடுவரை யிரும்பிடைப்
பறவையுண் டீட்டிய விறானற வருந்தி
யந்நிலத் தவரென வடிக்கடி வணங்கும்
வெள்ளியங் குன்றக முள்ளுறப் புகுந்தொரு
20
  தேவனு மதன்முடி மேவு முளனா
மெனப்புயங் கொட்டி நகைத்தெடுத் தார்க்கப்
பிலந்திறந் தன்ன பெருவா யொருபது
மலைநிரைத் தொழுக்கிய கரமிரு பத்தும்
விண்ணுடைத் தரற்றவுந் திசையுட்க முரியவுந்
25
  தாமரை யகவயிற் சேயிதழ் வாட்டிய
திருவடிப் பெருவிரற் றலைநக நுதியாற்
சிறிதுமலை யுறுத்த மதிமுடி யந்தணன்
பொன்னணி மாடம் பொலிநகர்க் கூட
லாவண விதி யனையவ ரறிவுறி
  னூருணி யன்னநின் மார்பகந் தோய்ந்தவென்
னிணைமுலை நன்ன ரிழந்தன வதுபோன்
மற்றவர் கவைமன மாழ்கிச்
செற்றநிற் பகர்வரிக் காறீண் டலையே.