|
|
செய்யுள்
81
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
உள்ளிருந்
தெழுந்து புறம்புநின் றெரியு
மளவாத் திருமணி யளித்த லானுங்
கொலைமுதிர் கடமான் முதிர்முகம் படர்ந்து
கொழுஞ்சினை மொடைந்து குளிரொடு பொதுளிய
நெடுமரத் திளங்கா நிலைத்த லானும் |
10
|
|
பாசடை யும்பர் நெடுஞ்சுனை விரிந்த
பேரிதழ்த் தாமரை பெருக லானு
நெடுவிசும் பணவும் பெருமதி தாங்கி
யுடையா வமுத முறைத லானு
மிளமையுந் தொங்கலு மின்பமு மொருகால் |
15
|
|
வாடாத் தேவர்கண் மணத்த லானும்
நூறுடை மகத்திற் பேறுகொண் டிருந்த
புரந்தரன் போலும் பொன்னெயி லெறிந்த
மணிவேற் குமரன் றிருவளர் குன்றம்
பேரணி யுடுத்த பெருநகர்க் கூடல் |
20
|
|
கோயில்கொண் டிருந்த குணப்பெருங் குன்ற
மருந்தவக் கண்ணினோ டடைந்தமா முனிபாற்
பேரிருண் மாயைப் பெண்மக விரக்க
வுவர்முதல் கிடந்த சுவையே ழமைத்துக்
கொடுத்தமெய்ப் பிண்டக் குறியுடன் றொன்றிய |
25
|
|
வெழுநிறச் சகரர்க ளேழணி நின்று
மண்புக மூழ்கிய வான்பரி பிணிக்கப்
பன்முக விளக்கிற் பரிதியிற் றோட்டிய
வேலைக் குண்டகழ் வயிறலைத் தெழுந்த
பெருங்கார்க் கருங்கடு வரும்பிய மிடற்றோ |
|
|
னெறிந்துவீ
ழருவியு மெரிமணி யீட்டமு |