மூலமும் உரையும்589



திருக்கோவையார் செய்யுள் 175
காப்புச்சிறைமிக்க கையறு கிளவி

     அஃதாவது: இற்செறிக்கப்பட்டு வருந்தாநின்ற தலைவி இரவுக் குறிக்கண் தலைவனைத் தலைப்படுதற்கு இடையூறு பற்பல இருத்தல் கண்டு தன்னுட் பெரிதும் வருந்திக் கூறியது என்றவாறு. அதற்குச் செய்யுள்:-

இன்னற வார்பொழிற் றில்லை
     நகரிறை சீர்விழவிற்
பன்னிற மாலைத் தொகைபக
     லாம்பல் விளக்கிருளின்
றுன்னற வுய்க்குமில் லோருந்
     துயிலிற் றுறைவர்மிக்க
கொன்னிற வேலொடு வந்திடின்
     ஞாளி குரைதருமே.

மெய்யுறு காவலிற் கையறு கிளவி

     (இ-ள்) இன் நறவு ஆர் பொழில் தில்லைநகர் இறை சீர் விழவில்-இனிய தேன் பொருந்திய பூம்பொழிலை யுடைய இத் தில்லை நகரத்திற்குக் கடவுளாகிய அம்பலவாணருடைய சிறப்புடைய திருவிழாவின்கண்; பல் நிற மாலைத் தொகை பகல் ஆம்-மாணிக்கம் முதலானவற்றால் பல நிறத்தையுடையவாகிய மாலைத் தொகுதிகளாலே இவ்விராப்பொழுதும் பகற் பொழுதாக நிற்கும்; பல்விளக்கு இருளின் துன் அற உய்க்கும்- அவ்விழாவின்பொருட்டு ஏற்றிய பலவாகிய விளக்குகளோ இங்கு இருள் பொருந்துதல் அறும்படி அகற்றும்; இல்லோரும் துயிலின்-இவ்விடையூறுகளே யன்றி ஒருபொழுதும் துயிலாத இவ்வில்லத்தோர் சிறிது துயில் கொள்வாராயின்; துறைவர்கொன் மிக்க நிறவேலொடு வந்திடின்-நம் பெருமான் அச்சத்தைச் செய்யும் மிக்க நிறத்தையுடைய வேலோடு ஒருகால் வருவராயின்; ஞாளி குரைதரும்-அப்பொழுது நாய்கள் குரையாநிற்கும் ஆதலின் அவரை நாம் எதிர்ப்படுதல் எங்ஙனம் என்க.

     (வி-ம்.) விழவு-திருவிழா. மணிமாலைகள் தம் மொளியால் இருளை அகற்றுதலின் இவ்விரவும் பகல் ஆகும் என்றவாறு. இனி மாலைத் தொகையும் இராப்பகலாகாநிற்கும். பல் விளக்கும் இருளைத் துரக்கும் என்று கூறினும் அமையும். இருளின் துன்-இருளின் துன்னுதல். இல்லோருந் துயிலின் என்றதனால் அஃதும் ஓரிடையூறு என்றாளாயிற்று. கொன்-அச்சம். இதனை,