|
|
செய்யுள்
85
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
பழுதறு
தெய்வங் காட்டப் பண்டையி
னுழுவ னலத்தா லோருயி ரென்றுங்
கடுஞ்சூ டந்துங் கைபுனை புனைந்தும்
பூழியம் போனகம் பொதுவுட னுண்டுங்
குழமகக் குறித்துச் சிலமொழி கொடுத்துங் |
10
|
|
கையுறை
சுமந்துங் கடித்தழை தாங்கியு
முயிரிற் றளர விரங்கியு முணங்கியும்
பனையுங் கிழியும் படைக்குவ னென்று
மிறடியஞ் சேவற் கெறிகவண் கூட்டியும்
புனமுமெம் முயிரும் படர்கரி தடிந்து |
15
|
|
மழுங்குறு
புனலெடுத் தகிற்புகை யூட்டியு
மொளிர்மணி யூசல் பரியவிட் டுயர்த்து
மிரவினிற் றங்க வெளிவர விரந்து
மிருவியம் புனத்திடை யெரியுயிர்ப் பெறிந்தும்
தெரிந்தலர் கொய்துந் பொழிற்குறி வினவியு |
20
|
|
முடலொடும்
பிணைந்தகை யாய்துயி லொற்றிச்
செறியிருட் குழம்பகஞ் சென்றுபளிங் கெடுத்த
விற்பொழிற் கிடைக்கு மளவுநின் றுலைந்தும்
பன்னாட் பன்னெறி யழுங்கின ரின்று
முகனைந்து மணத்த முழவந் துவைக்க |
25
|
|
வொருகாற்
றூக்கி நிலைய மொளிர்வித்து
மூவுட லணைத்தமும் முகத்தொ ரோமுகத்
தெண்கடிப்பு விசித்த கல்லல் செறிய
விருட்குற ளூன்றியெம் மருட்களி யாற்றி
யுருள்வாய்க் கொக்கரை யும்பர்நாட் டொலிக்கக் |
30
|
|
கரங்கால்
காட்டித் தலைய மியக்கி
யிதழவிழ் தாமரை யெனுந்தகு ணித்தந்
துவைப்பநின் றமைகரத் துக்கவைக டோற்றிக்
கரிக்கா லன்ன மொந்தைகலித் திரங்கத்
துடியெறிந் திசைப்பத் துகளம் பரப்பி |
|
|
வள்ளம்
பிணைத்தசெங் கரடிகை மல்க
வெரியக லேந்திவெம் புயங்கமிசை யாக்கி |