|
|
செய்யுள்
89
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
ஊர்நகைத்
துட்க வூக்குமோர் விருந்தினைக்
குவளையடி பூத்த கட்டவள வாணகைக்
குறுந்தொடி மடந்தைநந் தோழியுங் கேண்மோ
கவிரலர் பூத்தசெஞ் செம்மைவிற் குடுமி
மஞ்சடை கிளைத்த வரிக்குறு முட்டாட் |
10
|
|
கூரரி
வாளன் றோகையஞ் சேவற்
கொடியோன் குன்றம் புடைவளர் கூடற்
கணிச்சியங் கைத்தலத் தருட்பெருங் காரண
னுலகுயிர் மகவுடைப் பசுங்கொடிக் கொருபாற்
பகுத்துயிர்க் கின்பந் தொகுத்துமெய்த் துறவினன் |
15
|
|
முளரிநீர்ப்
புகுத்திய படமலர்த் தாட்டுணை
மணிமுடி சுமந்தநம் வயலணி யூரர்பின்
வளர்மறித் தகரெனத் திரிதரும் பாண்மக
னெனக்குறித் தறிகிலம் யாமே யெமது
மணியொளிர் முன்றி லொருபுடை நிலைநின் |
20
|
|
றன்ன
வூரர் புல்லமும் விழுக்குடிக்
கடாஅக் கிளவியும் படாஅப் பழியு
மெங்கையர் புலவியி லியம்பின நம்பாற்
றனதுமுன் புன்மொழி நீளத் தந்து
மொன்றுபத் தாயிர நன்றுபெரப் புனைந்துங் |
25
|
|
கட்டிய
பொய்ப்பரப் பனைத்துநிற் குறுத்திற்
பேரெறுழ்ச் சகர ரேழெனப் பறித்த
முதிர்திரை யடிக்கும் பரிதியந் தோழங்
காட்டையு ளிம்பர் காணத்
தோட்டிநின் றளிக்குந் தன்மையது பெறுமே. |