மூலமும் உரையும்639



நிற்கும், ஆதலால் தலைவன் பரத்தமையிற் பிரிந்தமையால் தனித்திருத்தலின் அதனைத் தமக்குவமையாக்கினாள். மெய்ப்பாடு-அழுகை. பயன்-அவாவுயிர்த்தல்.

 
 

செய்யுள் 91

நேரிசையாசிரியப்பா

 
   
5
  வாய்வலங் கொண்ட வயிற்றெழு தழலுக்
காற்றா தலைந்து காற்றெனக் கொட்புற்
றுடைதிரை யருவி யொளிமணி காலுஞ்
சேயோன் குன்றகத் திருப்பெறு கூடற்
கொழுஞ்சுடர் கிளைத்தல் நெடுஞ்சடைப் புயங்கன்
10
  பவளந் தழைத்த பதமலர் சுமந்தநம்
பொருபுன லூரனைப் பொதுவென வமைத்த
வக்கடி குடிமனை யவர்மனை புகுத்தி
யறுவாய் நிறைந்த மதிப்புறத் தோவெனச்
சுரைதலை கிடைத்த விசையுளர் தண்டெடுத்
15
  தளிதார் பாடுங் குரனீர் வறந்த
மலைப்புட் போல நிலைக்குர லணந்தாங்
குணவுளங் கருதி யொளியிசை பாட
முட்டாண் மறுத்த முண்டகந் தலையமைத்
தொருபா லணைந்தவிவ் வுயர்மதிப் பாணற்
  கடுத்தனை யுதவ வேண்டுங்
கடுத்திகழ் கண்ணியக் கல்லையிக் கணமே.

(உரை)
கைகோள்: கற்பு. தலைவி கூற்று.

     (இதுவும் கோவையார்ச் செய்யுளுக்குக் கூற்றுவகையால் மாறுபட்டிருத்தல் உணர்க.)

துறை: பாணன் வரவுரைத்தல்.

     (இ-ம்.) இதற்கு, “அவனறிவு ஆற்ற அறியும்” (தொல். கற்பி. 6) எனவரும் நூற்பாவின்கண், ‘வாயிலின் வரும் வகை’ என்னும் விதி கொள்க.

3 - 10: உடைதிரை......................எடுத்து

     (இ-ள்) உடைதிரை யருவி ஒளி மணி காலும் சேயோன் குன்று அகம்-சிதறி வீழ்கின்ற அலைகளையுடைய அருவிநீர்