மூலமும் உரையும்659



திருக்கோவையார் 358 ஆம் செய்யுள்
பள்ளியிடத்துாடல்

     அஃதாவது தன் ஆற்றமையே வாயிலாகப் புகுந்து பள்ளியிடத்தானாகிய தலைவனோடு ஊடினளாய்த் தலைவி அவனை நோக்கி ஏடா நின்னை இடைவிடாது தற்கு யான் முற்காலத்தே தவம் செய்திலேன், என்னை நீ புறக்கணித்தற்குரிய என் தீவினையே யான் நோவதல்லது நின்னை நோவதனாற் பயன்என்னை? துகிடக்க நின்னுடைய பரத்தையர் பிற ஆடவர்பால் பயின்று கற்று நினக்குப் புதுமையாகச் செய்த தழுவுதல் போல யான் நின்னை தழுவ அறியேன் ஆதலால் என்னைத் தொடாதே கொள், என்கலையை விடு என்று கலவி கூறியது என்றவாறு, அதற்குச் செய்யுள்

தவஞ்செய் திலாதவெந் தீவினை
     யேம்புன்மைத் தன்மைக்கெள்ளா
தெவஞ்சேய்து நின்றினை யின்றுனை
     சிவன்செய்த சீரரு ளார்தில்லை
யூரநின் சேயிழையார்
     நவஞ்செய்த புல்லங்கண் மாட்டேக்
தொடல்விடு நற்கலையே,
பீடிவர் கற்பிற்றறேுடிவர்கோதை
ஆடவன் றன்னேு டுடி யுரைத்தது,

     (இ-ள்) அத்தன் - உலகத்துள்ளார் எல்லார்க்கும் தந்தையும் முத்தன்-இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனும்,சிவன் - எவ்வுயிருர்க்கும் எப்பொழுதும் மையைச் செய்தலால் சிவன் என்னும் திருப்பெயரையுடையவனும் ஆகிய இறைவனால்,செய்தசீர் அருள் ஆர்தில்லை ஊர - செய்யப்பட்ட சீரிய அருள் றைந்த தில்லையின் கண்ணள்ள தலைவனே, தவம் செய்திலாத வெம் தீவினையேம் -முற்காலத்துத் தவத்தைச் செய்யாத வெய்ய திவினையையிடைய யாம்,புன்மைத் தன்மைக்கு எள்ளாது - நின்னால் விரும்பப்படாத எமது சிறுமையின் பொருட்டு எம்மையே இகழ்வதன்றி,எவம் செய்து நின்று இன்று இனி உனை நோவது என் - நினக்குத் துன்பத்தைச் செய்யாநின்று இப்பொழுது இனி உன்னை நோவதனால் பயன் என்னும்,அதுகிடக்க, நின் சேயிழையார் நவம் செய்த புல்லங்கள் மாட்டேம் -நின்னுடைய சிவந்த அணிகலன்களையுடைய பரத்தைமார் நினக்குப் புதிதாகச் செய்து காட்டிய தழுவுதல்களைச் செய்ய யாமறியேம் அதனால்,நல்கலை தொடல் விடு -