திருக்கோவையார் 218 ஆம் செய்யுள்
நெறிவிலக்கிக் கூறல்
அஃதாவது:
தலைவன் தலைவியை அழைத்துக்கொண்டு பாலை நிலத்திஏ செல்லுங்கால் எதிரே வந்தோஎ
அவனை நோக்கி ஐய பொழுதும் சென்றது; இனி நீ செல்லும் வழியில் நன்மக்களில்லை.
நீ தனையை. இவளோ வாடினள்; ஆதலால், ஈண்டு எம்மூரின்கண் தங்கிச் செல்வாயால எனக்
கூறியது என்றவாறு. அதற்குச் செய்யுள்:-
விடலையுற் றாரில்லை
வெம்முனை
வேடர் தமியைமென்பூ
மடலையுற் றார்குழல் வாடினண்
மன்னுசிற் றம்பலவர்க்
கடலையுற் றாரி னெறிப்பொழிந்
தாங்கருக் கன்சுருக்கிக்
கடலையுற் றான்கடப் பாரில்லை
டின்றிக் கடுஞ்சுரமே.
|
கரத்திடைக் கண்டவர் சுடர்க்குழை மாதொடு சரத்தணி வில்லோய் தங்கு கென்றது.
(இ-ள்)
விடலை-விடலாய்!; உற்றா இல்லை-இனி நீ செல்லும் நெறிக்கண் நன்மக்கள் இல்லை;
வெம்முனை வேடர்-ஆண்டுள்ளார் எல்லாம் வெவ்விய போர்த்தொழிலையுடைய வேடவரேகாண்;
தமியை-நீயோ தனியை, மென்பூ மடலை உற்று ஆர்குழல் வாடினள்-மெல்லிய பூவின் இதழைப்
பொருந்தி நிறைந்த கூந்தலையுடைய இப்பெருமகளோ வழிவந்த வருத்தத்தால் வாடியிருக்கின்றனள்;
மன்னு சிற்றம்பலவர்க்கு அடலை உற்றாரின்-நிலைபெற்ற திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள
இறைவனுக்குப் பகையாய் பண்பினை உடையார்போல; அருக்கன் எறிப்பு ஒழிந்து சுருக்கி ஆங்குக்
கடலை உற்றான்-கதிரவனோ விளக்கமொழிந்து தன் சுடர்களைச் சுருக்கிக்கொண்டு அம்மேற்றிசையின்கண்
கடலைச் சென்று பொருந்தினான்; இக்கடுஞ்சுரம் இன்று கடப்பாரில்லை-இக்கடிய பாலை நிலத்தை
இப்பொழுது கடப்பாரும் இல்லை. ஆதலால் ஈண்டுத் தங்குவாயாக என்றவாறு.
(வி-ம்.)
விடலை-ஆடவரிற் சிறந்தவன். ஈண்டு அது விளி ஏற்று நின்றது. உற்றார் இல்லை என்றது
உனக்கு உறவாம் தன்மையுடைய நன்மக்கள் இல்லை என்றவாறு. உற்றார் இல்லை வெம்முனை
வேடர் என்றதனால் உள்ளாரெல்லாம் வெம்முனை வேடரே என்பது கருத்தாகக்
|