668கல்லாடம்[செய்யுள்96]



கொள்க. மன்னுதல்-நிலைபெறுதல். அடல்-போர். அஃது ஈண்டு அதற்குக் காரணமாகிய பகைப் பண்பு குறித்து நின்றது. இறைவனுக்குப் பகையாயினார் தாமே ஒளிகுன்றி வீழ்ந்தொழிதல் போலக் கதிரவனும் ஒளிக்குன்றிக் கடலில் வீழ்ந்தொழிந்தான் என்றவாறு.எறிப்பு-ஒளி. ஆங்கு என்றது மேற்றிசையைச் சுட்டிக் கூறியபடியாம். அருக்கன்-கதிரவன். சுருக்கி என்றதற்கேற்பக் கதிரவனைச் சுருக்கி என்க. இன்று என்றது இற்றை இரவில் என்பதுபட நின்றது. ஆகையால் ஈண்டுத் தங்குவாயாக என்பது குறிப்பெச்சம். அருக்கன் பெருக்கி என்றும், பெருகி என்றும் பாடம். இவற்றிற்கும் கதிர்களைச் சுருக்கிச் சுருங்கி என்றே பொருள் கொள்க. என்னை! விளக்கைப் பெருக்கினள் விளக்குப் பருகிற்று என மங்கல வழக்காகக் கூறுதல் உண்மையின் என்க. மெய்ப்பாடு-அழுகை. பயன்-நெறிவிலக்குதல்.

 
 

செய்யுள் 96

நேரிசையாசிரியப்பா

 
   
5
  வனப்புடை யனிச்சம் புகைமுகிழ் கியதென
விவ்வணங் கவ்வதர்ப் பேய்த்தேர்க் கிடைந்தன
டென்றிசைக் கோமகன் பகடு பொலிந்தன்ன
கறையடிச் சென்னியி னகநுதி போக்கிக்
குருத்தயில் பேழ்வாய்ப் பற்படைச் சீய
10
  மதர்தொறுங் குழுவு மவற்றினு மற்றவன்
கடுங்காற் கொற்றத் தடுந்தூ துவரெனத்
தனிபார்த் துழலுங் கிராதரும் பலரே
யொருகா லிரகத் தெழுபரி பூட்டி
யிருவான் போகிய வெரிசுடர்க் கடவுண்
15
  மாதவ ராமென மேன்மலை மறைந்தனன்
மின்பொலி வேலோ யன்னபிர்க் கருளுங்
கூடற் பதிவரு மாடற் பரியோ
னெட்டெட் டியற்றிய கட்டமர் சடையோ
னிருசர ணடைந்த மறுவிலர் போல
20
  வருளுடன் றமியை வாடினை யைய
தண்ணீர் வாய்தருஞ் செந்நிறச் சிதலை
யுதவுதி ரரிசி யன்ன செந்தினை
நுண்பதந் தண்டேன் விளங்கனி முயற்றசை
வெறிக்கட் கவைடியைக் கடுங்கான் மேதி
  யன்புமகப் பிழைத்துக் கல்லறைப் பொழிந்த
வறட்பா லின்னவெம் முழையுள வயின்று