674கல்லாடம்[செய்யுள்97]



 
 

செய்யுள் 97

நேரிசையாசிரியப்பா

 
   
5
  வெறிக்குறுங் கதுபின் வெள்ளியிற் றெயிற்றியர்
செம்மணி சுழற்றித் தேனிலக் கெறிதரப்
பெருக்கெடுத் திழிதரும் வெள்ளப் பிரசக்
கான்யா றுந்துங் கல்வரை நாட
சொற்றவ றுவக்கும் பித்தினர் சேர்புலன்
10
  சிறிதிடைத் தெருள்வது முடனுடன் மருள்வது
மாமெனக் காட்டு மணியிருண் மின்னலி
னிணம்புணர் புகர்வே லிணங்குதுணை யாகக்
காம மாறுட் கவர்தரும் வெகுளுநர்
படிறுளங் கமழுஞ் செறிதரு தீயுறழ்
15
  கொள்ளி வாய்க்குணங் குள்ளதோ றிவரிய
மின்மினி யுமிழுந் துன்னலர் கள்ளியை
யன்னையென் றணைதரு மரையிருள் யாமத்துக்
கடுஞ்சுட ரிரவி விடுங்கதிர்த் தேரினை
மூல நிசாசரர் மேனிலம் புடைத்துத்
20
  துணைக்கரம் பிடித்தெனத் த்ற்றிடும் பொழில்சூழ்
கூடற் பதிவருங் குணப்பெருங் குன்றினன்
றாமரை பழித்த விருசர ணடையாக்
கோளினர் போலக் குறிபல குறித்தே
யைந்தமர் கதுப்பின ளமைத்தோ ணசைஇத்
25
  தருவிற் கிழவன் றானென நிற்றி
நின்னுயிர்க் கின்ன னேர்தரின் றிருவின்
றன்னுயிர்க் கின்ன றவரில வாவா
விரண்டுயிர் தணப்பென வெனதுகண் புணரவிக்
கொடுவழி யில்வர வென்றும்
  விடுவது நெடும்புக ழடுவே லோயே.

(உரை)
கைகோள்: களவு. தோழிகூற்று

துறை: ஆறுபார்த்துற்ற வச்சக்கிளவி

     (இ-ம்.) இதற்கு, “நாற்றமும் தோற்றமும்” (தொல். களவி. 23) எனவரும் நூற்பாவின்கண் ‘ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்