திருக்கோவையார் 230 ஆம் செய்யுள்
நற்றாய் வருந்துதல்
அஃதாவது:
தலைவி தலைவனுடன் சென்றமை கேட்டு உண்மகிழ்வோடு நின்று என்மகள் பிறள் மகன் ஒருவனொடு
தன் தோழியையும் விட்டு என்னையும் முன்னே துறந்து அம்பகைவர் முன்னே இவ்வூர் அலர்
தூற்றும்படி அருஞ்சுரம் போயினளே! இனி யான் எங்ஙனம் ஆற்றுவேன் என நற்றாய் பிரிவாற்றாது
வருந்தியது என்பதாம். அதற்குச் செய்யுள்:-
யாழியன்
மென்மொழி வன்மனப்
போதையா ரேதிலன்பின்
தோழியை நீத்தென்னை முன்னே
துறந்துதுன் னார்க்கண்முன்னே
வாழியும் மூதூர் மறுகச்சென்
றாளன்று மால்வணங்க
வாழிதந் தானம் பலம்பணி
யாரி னருஞ்சுரமே.
|
கோடாய் கூற நீடாய் வாடியது.
(இ-ள்) யாழ் இயல்
மென் மொழி வல் மனப்பேதை-யாழ் ஓசையை ஒத்த இனிமையையுடைய மெல்லிய மொழியையும்
அதற்கொவ்வாத வலிய மனத்தையுமுடைய பேதையாகிய என்மகள்; ஒர் ஏதிலன்பின்-பிறள்
மகனாகிய ஒரு நொதுமலன் பின்னே; தோழியை நீத்து-தன் உயிரினும் சிறந்த தோழையையும்
பிரிந்து; என்னை முன்னே துறந்து-ஈன்று இதுகாறும் பேணி வளர்த்த தாயாகிய என்னையும்
முற்படவே நீங்கி; இம்மூதூர் துன்னர் கண்முன்னே மறுக-இப் பழைய ஊரின்கண் வாழும் ஏதின்
மகளிர் எம்பகைவர் கண்முன்னே அலர் தூற்றித் திரிதராநிற்ப; அன்று மால்வணங்க ஆழிதந்தான்
அம்பலம்பணியாரின்-படொரு காலத்தே திருமால் வனங்குதலால் அவனுக்கு ஆழிப்படையை வழங்கிய
சிவபெருமானுடைய திருவம்பலத்தை வனங்காத மடவோரைப் போல; அருசுரம் சென்றாள்-கடத்தற்கரிய
பாலை நிலத்தைச் சென்றாள். யான் இனி எங்ஙனம் ஆற்றுவேன் என்பதாம்.
(வி-ம்.) யாழ்: ஆகுபெயர்.
மென்மொழி வன்மனம் என்றமையால் அம்மொழிக்கேலாத வன்மனம் என்றாளாயிற்று. கண்ணோட்டமின்றித்
தம்மைப் பிரிந்தாள் என்பாள் வன்மனப் பேதை என்றாள். ஏதிலான்-தொடர்பில்லாதவன்.
தோழியை என்பதுபட நின்றது. இச்செறிந்த நாள்முதலாக
|