702கல்லாடம்[செய்யுள்



திருக்கோவையார் 281 ஆம் செய்யுள்
தூதுகண்டழுங்கல்

     அஃதாவது: தூதுவரவுரைப்பக் கேட்ட தலைவி இஃது அயலார் தூதாகலான் இவை வருவன செல்வனவாக நின்றன. காதலர் இன்று வராதிருக்கின்றது என்செய்யக் கருதியெண்று அறிகிலேன் என ஏதிலார் தூதுகண் டழுங்காநிற்றல் என்றவாறு. அதற்குச் செய்யுள்:

வருவன செல்வன தூதுக
     ளேதில வான்புலியூ
ரொருவன தன்பரி னின்பக்
     கலவிக ளுள்ளுருகத்
தருவன செய்தென தாவிகொண்
     டேகியென் னெஞ்சிற்றம்மை
யிருவின காதல ரேதுசெய்
     வானினின்ருக் கின்றதே.

அயலுற்ற தூதுவரக் கயலுற்ற கண்ணி மயலுற்றது.

     (இ-ள்) ஏதில தூதுகள்-அயலவாகிய தூதுகள்; வருவன செல்வன-வருவனவும் போவனவுமாயிருக்கின்றன; வான் புலியூர் ஒருவனது-சிறந்த புலியூரின்கண் ணெழுந்தருளிய ஒப்பற்ற சிவபெருமானுடைய; அன்பரின்-அன்பர்போல்; இன்பக் கலவிகள்-இன்பமான புணர்ச்சிகளை; உள் உருகத் தருவன செய்து-நெஞ்சுருகத் தருமவற்றை முன்னே செய்து; எனது ஆவி கொண்டு ஏகி-பின்னே என் உயிரையே கவர்ந்து போய்; என் நெஞ்சில் தம்மை இருவின-என் நெஞ்சத்திலே தம்மை நிலைநிறுத்தின, காதலர்-எம்பெருமான்; இன்று இருக்கின்றது ஏது செய்வான்-இன்று வாளாவிருக்கின்றது என் செயக் கருதியோ யானறிகின்றிலேன் என்பதாம்.

     (வி-ம்.) தூதுவர் வருகின்றனரேயல்லது தூதுவிடுத்த எம்பெருமான் வாராது வாளா விருக்கின்றனர். அங்ஙனமிருத்தற்குக் காரணம் அறிகின்றிலேன் என்றவாறு. தூதர் ஏதிலார் ஆகலின் ஏதில தூதுகள் என்றாள். கலவி-புணர்ச்சி. இருவின-இருத்தின நிலை நிறுத்தின. மெய்ப்பாடு-அழுகை. பயன்-அயாவுயிர்த்தல்.

 
 

செய்யுள் 100

நேரிசையாசிரியப்பா

 
   
  வளைந்துநின் றுடற்று மலிகுளிர்க் குடைந்து
முகிற்றுகின் மூடி மணிநெருப் பணைத்துப்
புனமெரி காரகிற் புகைபல கொள்ளும்