மூலமும் உரையும்71



எனக்கு முகந் தந்திலள் என்பாள் என்னை முன்னே துறந்தாள் என்றாள். வாழி; அசைநிலை. மூதூர; ஆகுபெயர். மறுகுதல்-சுற்றித் திரிதல். அருஞ்சுரம் சென்றாள் என மாறுக. மால்வணங்க ஆழிதந்தான் என்றது சிவபெருமானை. அம்பலம் பணியார் பாலை நிலம் முதலியவற்றிற் பிறந்துழல்வர் என்பது பற்றி உவமை எடுத்தாள். மெய்ப்பாடு-அழுகை. பயன்-ஆற்றாமை நீங்குதல்.

செய்யுள் 7

நேரிரையாசிரியப்பா

 
   
5
  பொடித்தரும் பாதசின் முலைக்கொடி மடந்தையண்
மணிமிளிர் பெருங்கட் கிமைகாப் பென்ன
விழித்துழி விழித்து மடங்குழி யடங்கியுந்
தன்னைநின் றளித்த வென்னையு மொருவுக
பன்மணிக் கலன்க ளுடற்கழ களித்தெனச்
10
  சுற்றுடுந் தோங்கிய வாயமுந் துறக்குக
பிணிமுக மஞ்ஞை செருமுகத் தேந்திய
மூவிரு திருமுகத் தொருவே லவற்கு
வானுற நிமிர்ந்த மலைத்தலை முன்றின்
மனவணி மடந்தை வெறியாட் டாளன்
15
  வேன்மகன் குறத்தி மாமதி முதியோர்
தொண்டகந் துவைப்ப முருகியங் கறங்க
வொருங்குவந் திமையா வருங்கடன் முற்றிய
பின்னர்நின் றேற்றகைத் தாயையும் பிழைக்குக
கருந்தலைச் சாரிகை செவ்வாய்ப் பசுங்கிளி
20
  தூவியந் தோகைவெள் ளோதிமந் தொடருழை
யிவையுட னின்பமு மொருவழி யிழக்குக
சேயித ழிலவத் துடைகாய்ப் பஞ்சினம்
புகைமுரிந் தெழுந்தென விண்ணத் தலமரக்
குழைபொடி கூவையிற் சிறைசிறை தீந்த
25
  பருந்து மாந்தையும் பார்ப்புடன் றவழ
வுடைகவட் டோமை யுயர்சினை யிருக்கும்
வலைகட் கூகை மயங்கிவாய் குழற
வாசையிற் றணியா வழற்பசி தணிக்கக்
காளிமுன் காவல் காட்டிவைத் தேகுங்
  குழிகட் கரும்பேய் மகவுண் முகிழ்ப்ப
வேமுடற் சின்னம் வெள்ளிடை தெறிப்ப