80கல்லாடம்[செய்யுள்8]



 
 

செய்யுள் 8

நேரிசையாசிரியப்பா

 
   
5
  உயிர்புகுஞ் சட்டக முழிதொறு முழிதொறும்
பழவினை புகுந்த பாடகம் போல
முதிர்புயல் குளிறு மெழுமலை புக்க
கட்டுடைச் சூருடல் காமங் கொண்டு
பற்றியுட் புகுந்து பசுங்கடல் கண்டு
10
  மாவொடுங் கொன்ற மணிநெடுந் திருவேற்
சேவலங் கொடியோன் காவல்கொண் டிருந்த
குன்ற முடுத்த கூடலம் பதியிறை
தொடர்ந்துயிர் வவ்விய விடங்கெழு மிடற்றோன்
புண்ணியந் தழைத்த முன்னோர் நாளி
15
  லிருவிர னிமிர்த்துப் புரிவோடு சேர்த்துக்
குழையுடற் றலைவிரி கைத்திரி கறங்க
வொருவிரற் றெறித்து மைவிரற் குவித்தும்
பெருவா யொருமுகப் படகம் பெருக்கத்
தடாவுட லும்பர்த் தலைபெறு முழவ
20
  நான்முகந் தட்டி நடுமுக முரப்ப
வொருவாய் திறந்துட் கடிப்புடல் விசித்த
சல்லரி யங்கைத் தலைவிரற் றாக்கக்
கயந்தலை யடியெனக் கயிறமை கைத்திரி
யிருவிர லுயர்த்திச் செருநிலை யிரட்ட
25
  விருதலை குவிந்த நெட்டுடற் றண்ணுமை
யொருமுகந் தாழ்த்தி யிருகடிப் பொலிப்பத்
திருமல ரெழுதிய வரையிரு பத்தைந்
தங்குலி யிரண்டிரண் டணைத்துவிளர் நிறீஇ
மும்முகக் கயலுடன் மயிர்க்கயிறு விசித்த
30
  கல்ல வடத்திரள் விரற்கலை கறங்க
மரக்கா லன்ன வொருவாய்க் கோதை
முகத்தினுந் தட்ட மூக்கினுந் தாக்க
நாடிரு முனிவர்க் காடிய பெருமான்
றிருவடி விபவாக் கருவுறை மாக்க
  ணெஞ்சினுங் கடந்து நீண்டவல் லிரவிற்
செல்லவு முரியந் தோழி நில்லா