மூலமும் உரையும்87



திருக்கோவையார் 290 ஆம் செய்யுள்
அறத்தொடு நிற்றல்

     அஃதாவது: தலைவி இனி இக்கள வொழுக்கத்தினைத் தாய் முதலியோர்க்குத் தோழிவாயிலாய் அறிவுறுத்தக் கருதியவள், தோழியை நோக்கி, ‘ஏடி! ஈதொன்று கேள்! யாம் முன்னொரு நாள் கடற்கரையின்கண் மணல் வீடு கட்டிச் சிறு சோறு சமைத்து விளையாடினோம் அல்லமோ அப்பொழுது ஒருகாளை நம்பால் வந்து ‘யாம் உங்கள் (இவ்வண்டல்) வீட்டிற்கு விருந்தினோம்’ என்று கூறிய பொழுது, நீ பூக்கொய்யச் சிறிது அப்பாற் போய்விட்டாய். அந்நிலைமைக்கண் கீழ்காற்று மிக்கு வீசியதாலே கடல் அலைகள் மேலேறி வந்து என்னை இழுத்துச் செல்லலாயிற்று. அது கண்டு யான் தோழியோ! தோழியோ! என்று உன்னைக் கூவினேன். அதுகண்டு அவன் எனக்கு இரங்கி அருளோடு வந்து தன் கையைத் தந்தான். யானும் மயக்கத்திலே அக்கையை நின்கையென்று கருதிப் பற்றிக் கொண்டேன். அவனும் வேறொன்றும் கருதாமல் என்னை உய்யக் கொண்டு கரையின் மேல் விடுத்துப் போயினான். அன்று என்னுடைய நாணங் காரனமாக அந்நிகழ்ச்சியைச் சொல்லாது விட்டேன். இன்று இவ்வாறாயினபின் கூறினேன். இனி நீ செய்யபாலதனைச் செய்வாயாக” என்று அறத்தொடு நிற்றல் என்க. அதற்குச் செய்யுள்:

வண்டலுற் றேமெங்கண் வந்தொரு
     தோன்றல் வரிவளையீர்
உண்டலுற் றேமென்று நின்ற்தொர்
     போழ்துடை யான்புலியூர்க்
கொண்டலுற் லேறங் கடல்வர
     எம்முயிர் கொண்டுதந்து
கண்டலுற் றேர்நின்ற சேரிச்சென்
     றானொர் கழலவனே.

செய்த வெறியி னெய்துவ தறியாது நிறத்தொடித் தோழிக் கறத்தொடு நின்றது.

     (இ-ள்) வண்டல் உற்றோம்-தோழி முன்னொரு நாள் யாம் கடற்கரையின்கண் மணல்வீடு கட்டியும் சிறு சோறு சமைத்தும் விளையாடுதலைப் பொருந்தினேமாக; எங்கண் ஒரு தோன்றல் வந்து-அப்பொழுது ஒரு நம்பால் வந்து; வரிவளையீர் உண்டல் உற்றேம் என்று நின்றது ஓர் பொழுது-வரியினையுடைய வளையலையுடைய நங்கையீர்! யாம் இப்பொழுது நும்மைக்கண் உண்ணுதற்கு வந்துற்றோம் என்று கூறி நின்றானாக அப்பொழுது; உடையான் புலியூர்க் கொண்டல் உற்று ஏறுங் கடல்வர-(நீ மலர் கொய்யும் பொருட்டு வேறிடத்திற்குப் போயினை. போக) நம்மை ஆளுடையான்