ஆகிய சிவபெருமானுடைய
இப் புலியூரின்கண் கீழ்காற்று மிகுதியாலே பெருகி கரை மேலே வந்து ஏறாநின்ற கடல்
எம்மேல் வந்ததாக அது கண்டு; எம் உயிர் கொண்டு தந்து-யாம் அவ்வலையிலே முழுகி இறந்து
படாதபடி அந்நம்பி எம்முயிரைக் கைக்கொண்டு எமக்கே அருளி; ஓர் கழல்வன் கண்டல்
உற்று ஏர் நின்ற சேரிச் சென்றான்-அவ்வொப்பற்ற வீரக்கழலை யணிந்த நம்பி கண்டல்
மரங்கள் மிகுந்த அழகு நிலைபெற்ற அதோ தோன்று சேரியின்கட் சென்றான. இங்ஙனமாகலின்
இனி நீ தக்கது செய்வாயாக என்பதாம்.
(வி-ம்.) வண்டல்-மகளிர்
விளையாட்டு. வண்டலுற்றேமங்கண் என்றும் பாடம். இதற்கு அங்கண் என்பதனை ஏழாம் வேற்றுமைப்
பொருள்பட நின்றதோர் இடைச் சொல்லாகக் கொள்க. உடையான்-எம்மை ஆளுடையான் என்க.
கொண்டல்-கீழ்க்காற்று. எம்மேல்வர என்க. எம்முயிரைக் கொண்டு எமக்குத் தந்து என்க.
கண்டல்-ஒருவகை மரம். ஏர்-அழகு. சேரிச் சென்றான் என்பதற்குத் தேரிற் சென்றான்
என்றும் பாடவேற்றுமையுளது. இதற்கு நம்மைக் கண்டால் விரும்பித் தேர்மேல் ஏறிச் சென்றான்
என்றுரைக்க. தேரினென்பது கருவிப் பொருட்கண் வந்த ஐந்தாமுருபெனினும் அமையும். இதற்குக்
காண்டலுற்று என்பது குறுகி நின்றதாகக் கொள்க. தோன்றல் என்றும் கழலவன் என்றும்
கூறியதனால் அவனுடைய குலச் சிறப்பும் தோழிக் குணர்த்தினாளாயிற்று. எம் உயிர் கொண்டு
தந்து என்றதனால் மெய்யுறு புணர்ச்சி கூறினாளாயிற்று. மெய்ப்பாடு-பெருமிதம். பயன்-அறத்தொடு
நிற்றல்.
|
|
செய்யுள்
9
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
தன்னுழைப்
பலவுயிர் தனித்தனி படைத்துப்
பரப்பிக் காட்டலிற் பதும னாகியு
மவ்வுயி ரெவ்வுயி ரனைத்துங் காத்தலிற்
செவ்விகொள் கருமுகிற் செல்வ னாகியுங்
கட்டிய கரைவரம் புட்புக வழித்து |
10
|
|
நீர்தலை
தரித்தலி னிமல னாகியுந்
தருவு மணியுஞ் சங்கமுங் கிடைத்திலி
னரிமுதி ரமரர்க் கரச னாகியு
மூன்றழ னான்மறை முனிவர் தோய்ந்து
மரைநீ ருகுத்தலின் மரையோ னாகியு |
|
|
மீனுங்
கொடியும் விரிதிணை யைந்துந்
தேனுறை தமிழுந் திருவுறை கூடலி
மணத்தலின் மதிக்குல மன்னவ னாகியு |
|