திருக்கோவையாரின்
370 ஆம் செய்யுள்
தேர்வரவுகண்டு மகிழ்ந்துகூறல்
அஃதாவது:
யாற்றின்கண் புதுநீர் வந்ததனைக் கேள்வியுற்ற தலைவன் நீராட்டு விழாவின் பொருட்டுப்
பரத்தையர் சேரியின்கட் சென்றான். இவனது தேர் வருகை கண்ட பரத்தை மகளிர் தம்முள்
மகிழ்ந்து இவனைப் புணரத்தகுந்த தவத்தினை முற்பிறப்பிலே செய்தீர்கள்; இப்பொழுது
இவனொடு சென்று இவன் தோள்கலைத் தழுவிக் கொள்ளுங்கள்; உதோ அவன் தேரும் வந்தது
என்று கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்:
சேயே யெனுமன்னு தீம்புன
லூரந்திண் டோளிணைகள்
தோயீர் புணர்தவந் தொன்மைசெய்
தீர்சுடர் கின்றகொலந்
தீயே யெனுமன்னு சிற்றம்
பலவர்தில் லைந்நகர்வாய்
வீயே யெனவடி யீர்நெடுந்
தேர்வந்து மேவினதே.
|
பயின்மணித் தேர்செலப் பரத்தையர் சேரிக் கயன்மணிக் கண்ணியர் கட்டுரைத்தது.
(இ-ள்) சுடர்கின்ற
கொலம் தீயே என மன்னு-சுடரா நின்ற வடிவம் தீப்பிழம்பே என்று கண்டோர் சொல்லும்படி
நிலைபெற்ற; சிற்றம்பலவர் தில்லை நகர்வாய் வீயே என அடியீர்-திருச்சிற்றம்பலவாணனுடைய
திருத்தில்லை நகரத்தில் உள்ளீராகிய செந்தாமரைப் பூப்போன்ற அடிகளையுடைய மடந்தையீர்;
நெடுந்தேர் வந்து மேவினது-தலைவனது நெடியதேர் உதோ நஞ்சேரியின்கண் வந்துற்றது; புணர்த்தவம்
தொன்மைசெய்தீர்-நும்முள் இந்நம்பியைப் புணர்தற்குத் தகுந்த பெருந்தவத்தை முற்காலத்தே
செய்தீர்கள்; சேயே என மன்னு தீம் புனல் ஊரன் திண்தோள் இணைகள் தோயீர்-இவனைக்
கண்டோர் இவன் முருகவேளே என்று சொல்லும்படி நிலைபெறாநின்ற இனிய நீரையுடைத்தாகிய
ஊரையுடையவனது திண்ணிய தோள்களை இப்பொழுது சென்று தழுவிக்கொள்ளுங்கள் என்பதாம்.
(வி-ம்.) சேயே என
மன்னும் ஊரன் என்க. சேய்-முருகவேள். ஒன்றற்கொன் றிணையாயிருத்தலின் இணையெனத்
தனித்தனி கூறப்பட்டன. இஃது ஊடனிமித்தம். கோலம் எனற்பாலது கொலம் எனக்குறுகி நின்றது.
கயல் மணிக்கண்ணி என்றும் பாடம். இதற்குப் பரத்தையர் சேரியின்கன் தலைவன் தேர்செல்லக்
கண்ட தலைவி
|