1.
தமர் நினைவு கூறி வரைவு கடாதல்
|
|
|
|
அமுதமும்
தருவும் பணிவரப் படைத்த |
|
உடலக்கண்ணன்
உலகு கவர்ந்து உண்ட |
|
களவுடை
நெடுஞ் சூர்க் கிளை, களம் விட்டு ஒளித்த-- |
|
அருள்
நிறைந்து அமைந்த கல்வியர் உளம் எனத் |
|
தேக்கிய
தேனுடன் இறால் மதி கிடக்கும்-- |
5
|
எழு
மலை பொடித்த கதிர் இலை நெடு வேல் |
|
வள்ளி
துணைக் கேள்வன் புள்ளுடன் மகிழ்ந்த |
|
கறங்கு
கால் அருவிப் பரங்குன்று உடுத்த |
|
பொன்
நகர்க் கூடல் சென்னி அம் பிறையோன் |
|
(பொதியப்
பொருப்பன் மதியக் கருத்தினை, |
10
|
'கொங்கு
தேர் வாழ்க்கை'ச் செந்தமிழ் கூறி, |
|
பொற்குவை
தருமிக்கு அற்புடன் உதவி, |
|
என்
உளம் குடிகொண்டு இரும் பயன் அளிக்கும் |
|
கள்
அவிழ் குழல் சேர் கருணை எம்பெருமான்) |
|
மலர்ப்பதம்
நீங்கா உளப் பெருஞ் சிலம்ப! |
15
|
கல்லாக்
கயவர்க்கு அரு நூல் கிளை மறை |
|
சொல்லினர்
தோம் என, துணை முலை பருத்தன; |
|
பல
உடம்பு அழிக்கும் பழி ஊன் உணவினர் |
|
தவம்
என, தேய்ந்தது, துடி எனும் நுசுப்பே; |
|
கடவுள்
கூறார் உளம் என, குழலும், |
20
|
கொன்றை
புறவு அகற்றி, நின்ற இருள் காட்டின; |
|
சுரும்பு
படிந்து உண்ணும் கழுநீர் போல, |
|
கறுத்துச்
சிவந்தன கண் இணை மலரே; |
|
ஈங்கு
இவை நிற்க: சீறூர், பெருந் தமர், |
|
இல்லில்
செறிக்கும் சொல்லுடன், சில் மொழி |
25
|
விள்ளும்;
தமியில் கூறினர், |
|
உள்ளம்
கறுத்துக் கண் சிவந்து உருத்தே. |
|