10. பரத்தையிற் பிரிவு
கண்டவர் கூறல்
|
|
|
|
வடி
விழிச் சிற்றிடைப் பெரு முலை மடவீர்!- |
|
தொழுமின்;
வணங்குமின்; சூழ்மின்; தொடர்மின்; |
|
கட்டுதிர்
கோதை கடி மலர்; அன்பொடு |
|
முண்டக
முகையின் முலை முகம் தருமின்; |
|
உருளின்
பூழி உள்ளுற ஆடுமின்; |
5
|
எதிர்மின்;
இறைஞ்சுமின்; ஏத்துமின்; இயங்குமின்; |
|
கருப்புரம்
துதைந்த கல் உயர் மணித் தோள் |
|
வாசம்
படரும் மருத்தினும் உறுமின்; |
|
பெருங்
கவின், முன்நாள், பேணிய அருந் தவம் |
|
கண்ணிடை,
உளத்திடை, காண்மின்; கருதுமின்; |
10
|
பூவும்
சுண்ணமும் புகழ்ந்து எதிர் எறிமின்; |
|
யாழில்
பரவுமின்; ஈங்கு, இவை அன்றி, |
|
'கலத்தும்'
என்று எழுமின்; கண்ணளி காண்மின்-- |
|
வெண்சுடர்
செஞ்சுடர், ஆகிய விண்ணொடு, |
|
புவி,
புனல், அனல், கால், மதி புலவோன், என, |
15
|
முழுதும்
நிறைந்த முக்கட் பெருமான் |
|
(பனிக்
கதிர் குலவன் பயந்தருள் பாவையைத் |
|
திருப்
பெரு வதுவை பொருந்திய அந் நாள், |
|
சொன்றிப்
பெரு மலை தின்று நனி தொலைத்த, |
|
கார்
உடல் சிறு நகைக் குறுந் தாட் பாரிடம் |
20
|
ஆற்றாது
அலந்த நீர் நசை அடக்க, |
|
மறிதிரைப்
பெரு நதி வரவழைத்தருளிய |
|
கூடல்
அம் பதி உறை குணப் பெருங் கடவுள்) |
|
முண்டகம்
அலர்த்தும் முதிராச் சேவடி |
|
தரித்த
உள்ளத் தாமரை ஊரன் |
25
|
பொன்
துணர்த் தாமம் புரிந்து ஒளிர் மணித் தேர், |
|
வீதி
வந்தது; வரலான் நும் |
|
ஏதம்
தீர இரு மருங்கு எழுந்தே. |
|