11.
கல்வி நலம் கூறல் |
|
|
|
நிலையினின்
சலியா நிலைமையானும், |
|
பல
உலகு எடுத்த ஒரு திறத்தானும், |
|
நிறையும்
பொறையும் பெறும் நிலையானும், |
|
தேவர்
மூவரும் காவலானும், |
|
தமனியப்
பராரைச் சயிலம் ஆகியும்; |
5
|
அளக்க
என்று அமையாப் பரப்பினதானும், |
|
அமுதமும்
திருவும் உதவுதலானும், |
|
பல
துறைமுகத்தொடு பயிலுதலானும், |
|
முள்ளுடைக்
கோட்டு முனை எறி சுறவம் |
|
அதிர்
வளை தடியும் அளக்கர் ஆகியும்; |
10
|
நிறை
உளம் கருதி நிகழ்பவை நிகழ்பவை |
|
தருதலின்,
வானத் தரு ஐந்து ஆகியும்; |
|
மறை
வெளிப்படுத்தலின், கலைமகள் இருத்தலின், |
|
அகமலர்
வாழ்தலின், பிரமன் ஆகியும்; |
|
உயிர்
பரிந்து அளித்தலின், புலமிசை போக்கலின், |
15
|
படி
முழுது அளந்த நெடியோன் ஆகியும்; |
|
இறுதியில்
சலியாது இருத்தலானும், |
|
மறுமை
தந்து உதவும் இருமையானும், |
|
பெண்
இடம் கலந்த புண்ணியன் ஆகியும்; |
|
அருள்
வழி காட்டலின், இரு விழி ஆகியும்; |
20
|
கொள்ளுநர்
கொள்ளக் குறையாது ஆதலின், |
|
நிறை
உளம் நீங்காது, உறை அருள் ஆகியும்; |
|
இவை
முதல் ஆகி, இரு வினை கெடுக்கும்-- |
|
புண்ணியக்
கல்வி உள் நிகழ் மாக்கள், |
|
'பரிபுரக்
கம்பலை இரு செவி உண்ணும் |
25
|
குடக்
கோச் சேரன் கிடைத்து, இது, காண்க' என, |
|
'மதி
மலி புரிசை'த் திருமுகம் கூறி, |
|
'அன்பு
உருத் தரித்த இன்பு இசைப் பாணன் |
|
பெற
நிதி கொடுக்க' என உற விடுத்தருளிய, |
|
மாதவர்
வழுத்தும் கூடற்கு இறைவன் |
30
|
இரு
சரண் பெறுகுநர் போல, |
|
பெரு
மதி நீடுவர்; சிறுமதி நுதலே! |
|