13. நிலவு வெளிப்பட வருந்தல்  
 
நண்ணிய பாதி பெண்ணினர்க்கு அமுதம்  
அடு மடைப்பள்ளியின் நடு அவதரித்தும்,  
திரு வடிவு எட்டனுள் ஒரு வடிவு ஆகியும்,  
முக்கணில் அருட்கண் முறைபெற முயங்கியும்,  
படி இது என்னா அடி முடி கண்டும்,
5
புண்ணிய நீறு எனப் பொலி கதிர் காற்றியும்,  
நின்றனை; பெரு மதி! நின்-தொழுதேற்கும்  
நன்னரின் செய்குறும் நன்றி ஒன்று உளதால்;  
ஆயிரம் தழற்கரத்து இருட்பகை மண்டிலத்து,  
ஓரொரு பனிக் கலை ஒடுங்கி நின்று அடைதலின்--
10
கொலை நுதி எயிறு என்று இரு பிறை முளைத்த  
புகர்முகப் புழைக் கை ஒரு விசை தடிந்தும்,  
மது இதழ்க் குவளை என்று அடுகண் மலர்ந்த  
நெடுஞ் சுனை புதைய, புகுந்து எடுத்து அளித்தும்;  
செறிபிறப்பு, இறப்பு, என இரு வகை திரியும்
15
நெடுங் கயிற்று ஊசல் பரிந்து கலுழ் காலை,  
முன்னையின் புனைந்தும், முகமன் அளித்தும்;  
தந்த எம் குரிசில், தனி வந்து, எமது  
கண் எனக் கிடைத்து, எம் கண் எதிர் நடு நாள்--  
(சமயக் கணக்கர் மதி வழி கூறாது,
20
உலகியல் கூறி, 'பொருள் இது' என்ற  
வள்ளுவன் தனக்கு, வளர் கவிப் புலவர் முன்,  
முதற்கவி பாடிய முக்கட் பெருமான்)  
மாதுடன் தோன்றிக் கூடலுள் நிறைந்தோன்-  
தன்னை நின்று உணர்ந்து, தாமும் ஒன்று இன்றி,
25
அடங்கினர் போல, நீயும்,  
ஒடுங்கி நின்று அமைதி, இந் நிலை அறிந்தே!  
உரை