15.
அழுங்கு தாய்க்கு உரைத்தல் |
|
|
|
கல்
உயர் வரைத்தோட் செம் மனக் குரிசிலும், |
|
கல்லாதவர்
உளம் புல்லிய குழலும், |
|
இம்
மனை நிறை புகுந்து, எழில் மணம் புணர, |
|
கோளொடு
குறித்து வரும் வழி கூறிய |
|
மறை
வாய்ப் பார்ப்பான்மகனும் பழுது இலன்; |
5
|
சோதிடக்
கலைமகள் தோற்றம் போல, |
|
சொரி
வெள் அலகரும் பழுது இல் வாய்மையர்; |
|
உடல்
தொடு குறியின், வரும் வழி குறித்த |
|
மூது
அறி பெண்டிரும் 'தீது இலர்' என்ப; |
|
பெருந்
திரட்கண்ணுள் பேச்சு நின்று ஓர்ந்து, |
10
|
வாய்ச்
சொல் கேட்ட நல் மதியரும் பெரியர்; |
|
ஆய்
மலர் தெரிந்து இட்டு, வான் பலி தூவி, |
|
தெய்வம்
பராய மெய்யரும் திருவினர்: |
|
(கருங்
கொடி அடம்பும் கண்டலும் சூழ்ந்த |
|
பனைக்
குடிப் பரதவர் கலத்தொடும் மறிய, |
15
|
சுரிமுகச்
செவ் வாய்ச் சூல் வளை தெறிப்ப, |
|
கழுக்
கடை அன்ன கூர்வாய்ப் பெருங் கண் |
|
பனை
கிடந்தன்ன உடல் முதல் துணிய, |
|
ஆர்
உயிர் கவரும், கார் உடல் செங் கண், |
|
கூற்றம்
உருத்து எழுந்த கொள்கை போல, |
20
|
நெட்டுடல்
பேழ்வாய்ப் பெருஞ் சுறவு தடியும்-- |
|
வரை
நிரை கிடந்த திரை உவர் புகுந்து, |
|
நெடுஞ்
சடைக் கிடந்த குறும் பிறைக் கொழுந்தும், |
|
கரு
முகில் வெளுத்த திரு மிடற்று இருளும், |
|
நுதல்
மதி கிழித்த அழல் அவிர் நோக்கமும், |
25
|
மறைத்து
ஒரு சிறுகுடிப் பரதவன் ஆகி, |
|
பொன்
தலைப்புணர் வலை கொடுங் கரம் ஆக்கி-- |
|
நெடுங்
கடல் கலக்கும் ஒரு மீன், படுத்த) |
|
நிறை
அருள் நாயகன் உறைதரு கூடல் |
|
வணங்கார்
இனம் என மாழ்கி, |
30
|
குணம்
குடிபோய்வித்த ஆய் உளம் தவறே. |
|