19. பிறை தொழுக என்றல்  
   
நெடு வளி உயிர்த்து, மழைமதம் ஒழுக்கி,  
எழுமலை விழுமலை புடைமணி ஆக,  
மீன்புகர் நிறைந்த வான்குஞ்சர முகம்  
வால் பெற முளைத்த கூன் கோடுஆனும்;  
பேச நீண்ட பல் மீன் நிலைஇய
5
வானக்கடலில் தோணி-அதுஆனும்;  
கொழுநர் கூடும் காம-உததியைக்  
கரைவிட உகையும் நாவாய் ஆனும்;  
கள் அமர் கோதையர், வெள்ளணி-விழவில்,  
ஐங்கணைக் கிழவன் காட்சி உள் மகிழ
10
இழைத்து வளைத்த கருப்பு வில்ஆனும்--  
நெடியோன் முதலாம் தேவர் கூடி,  
வாங்கிக் கடைந்த தேம் படு கடலில்,  
அமுதுடன் தோன்றிய உரிமை யானும்;  
நின் திரு நுதலை ஒளி விசும்பு உடலில்
15
ஆடி நிழல் காட்டிய பீடு-அதுவானும்;  
கரை அற அணியும் மானக் கலனுள்  
தலை பெற இருந்த நிலைபுகழானும்;  
மண் அகம் அனைத்தும் நிறைந்த பல் உயிர்கட்கு  
ஆயா அமுதம் ஈகுத லானும்;
20
(பாற்கடல் உறங்கும் மாயவன் போல,  
தவள மாடத்து அகல் முதுகு பற்றி,  
நெடுங் கார் கிடந்து படும் புனல் பிழியும்  
கூடல் வீற்றிருந்த நாடகக் கடவுள்  
பொன்சுடர் விரித்த கொத்து அலர் கொன்றையும்,
25
தாளியும், அறுகும், வால் உளை எருக்கமும்,  
கரந்தையும், வன்னியும், மிடைந்த செஞ் சடையில்,  
இரண்டு-ஐஞ்ஞூறு திரண்ட முகம் எடுத்து,  
மண், பிலன், அகழ்ந்து, திக்கு நிலை மயக்கி,  
புரியாக் கதமோடு ஒருபால் அடங்கும்)
30
கங்கையில் படிந்த பொங்கு தவத்தானும்;  
அந் நெடு வேணியின் கண்ணி என இருந்து,  
தூற்றும் மறு ஒழிந்த ஏற்றத்தானும்--  
மணி வான் பெற்ற இப் பிறையைப்  
பணிவாய், புரிந்து, தாமரை மகளே!
35
உரை