20. ஆற்றாமை கூறல்
   
பொருப்பு மலி தோளினும், நெருப்பு உமிழ் வேலினும்,  
செந் திருமகளை, செயம் கொள் மங்கையை,  
வற்றாக் காதலின் கொண்ட மதி அன்றி--  
களவு அலர் தூற்ற, தளவு கொடி நடுங்க,  
வேயுளம் பட்டுப் பூவை கறுக்க,
5
தண்டா மயல்கொடு வண்டு பரந்து அரற்ற,  
காலம் கருதித் தோன்றி கை குலைப்ப,  
துன்பு பசப்பு ஊரும் கண் நிழல் தன்னைத்  
திரு மலர் எடுத்துக் கொன்றை காட்ட,  
'இறை வளை நில்லாது' என்பன நிலைக்க,
10
கோடல் வளைந்த வள் அலர் உகுப்ப;  
கண் துளி துளிக்கும் சாயாப் பையுளை,  
கூறு பட நாடி ஆசையொடு மயங்கி,  
கருவிளை மலர், நீர், அருகு நின்று, உகுப்ப;  
பேர் அழல் வாடை ஆர் உயிர் தடவ,
15
விளைக்கும் காலம் முளைத்த காலை--  
அன்பும், சூளும், நண்பும், நடுநிலையும்,  
தடையா அறிவும், உடையோய் நீயே!  
எழுந்து காட்டிப் பாடு செய் கதிர்போல்,  
தோன்றி நில்லா நிலைப் பொருள் செய்ய,
20
மருங்கில் பாதி தரும் துகில் புனைந்தும்,  
விளைவயல் ஒடுங்கும் முதிர்நெல் உணவினும்  
தம்மில் வீழுநர்க்கு இன்பம் என்று அறிந்தும்,  
(தண் மதி, கடுஞ் சுடர், வெவ் அழல், கண் வைத்து;  
அளவாப் பாதம், மண் பரப்பு, ஆக;
25
தனி நெடு விசும்பு திரு உடல் ஆக;  
இருந் திசைப் போக்குப் பெருந் தோள் ஆக;  
வழு அறு திருமறை ஓசைகள் அனைத்தும்,  
மொழிதர நிகழும் வார்த்தை ஆக;  
உள் நிறைந்து உழலும் பாடு இரண்டு உயிர்ப்பும்,
30
பகல் இரவு ஒடுங்கா விடுவளி ஆக--  
அடுபடைப் பூழியன் கடு முரண் பற்றி,  
இட்ட வெங் கொடுஞ் சிறைப் பட்ட கார்க் குலம்  
தளையொடு நிறைநீர் விடுவன போல,  
புரைசையொடு பாசம் அற உடல் நிமிர்ந்து,
35
கூடமும் கந்தும் சேறு நின்று அலைப்ப,  
மூன்று மத நெடும் புனல் கான்று, மயல் உவட்டி,  
ஏழ் உயர் கரித்திரள் கதமொடு பிளிறும்  
பெரு நகர்க் கூடல்--உறைதரு கடவுளை  
நிறையப் பேசாக் குறையுளர் போலவும்)
40
கல்லா மனனினும், செல்லுதி, பெரும!  
இளமையும், இன்பமும், வளனும், காட்சியும்,  
பின்புற, நேடின், முன்பவை அன்றால்,  
நுனித்த மேனித் திருவினட்கு: அடைத்த  
வினைதரும் அடைவின் அல்லது,
45
புனையக் காணேன், சொல் ஆயினவே.
உரை